சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரை உலகில் 40 வருடங்களுக்கு மேலாக நடித்த ஓடிக் கொண்டிருக்கிறார் இப்பொழுது கூட வருடத்திற்கு ஒரு படத்தை அழகான முறையில் கொடுத்து வருகிறார் அதனால் அவரது மார்க்கெட் குறையாமல் இருந்து வருகிறது. அண்ணாத்த பட்டத்தின் வெற்றியை தொடர்ந்து இளம் இயக்குனர் நெல்சன் உடன் முதல் முறையாக கைகோர்த்து நடித்துவரும் திரைப்படம் ஜெயிலர்.
இந்த படம் சூப்பர் ஸ்டாருக்கு 169வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப் பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்து வருகிறது ஜெயிலர் படத்தின் சூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக எடுக்கப்பட்ட வருகிறது இந்த படத்தில் ரஜினி உடன் கைகோர்த்து சிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.
இந்த படம் நிச்சயம் ரசிகர்களை கவர்ந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினி நடித்த கபாலி படம் குறித்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது. 2016 ஆம் ஆண்டு வெளியான கபாலி படத்தை கலைபுலி எஸ் தான அவர்கள் தயாரித்திருந்தார் அந்த படத்தை பா. ரஞ்சித் இயக்கியிருந்தார்.
இந்த படத்தில் ரஜினி மலேசிய டானாக நடித்திருப்பார் அவருக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே அவருக்கு மகளாக தன்ஷிகா நடித்திருந்தார். இந்த படத்தை பெரிய அளவில் மக்கள் மற்றும் ரசிகர்கள் எதிர்பார்த்த நேரம் ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு நல்ல விமர்சனத்தை பெறவில்லை கலவையான விமர்சனத்தை பெற்று படம் ஓடியது. இந்த நிலையில் ரஜினியின் கபாலி படத்தை தயாரித்த கலை புலி தாணு அவர்கள் சமீபத்திய ஒன்றில் கபாலி படம் ஒட்டுமொத்தமாக எவ்வளவு வசூல் செய்தது குறித்து கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர் அமெரிக்காவில் மட்டும் 100 கோடிக்கு மேல் வசூலித்தது அதேபோல அந்த படத்தின் மொத்த வசூல் ஆயிரம் கோடிக்கு மேல் வரும் அவ்ளோ வசூல் செய்தது. வெளிநாட்டு வசூல் மூல மட்டுமே நிறைய வசூல் வந்தது என கூறி இருந்தார். ஆனால் படம் ரிலீஸ் ஆன சமயத்தில் 650 to 670 கோடி வசூலித்ததாக கூறப்பட்ட வந்த நிலையில் தற்போது ஆயிரம் கோடி வசூலித்ததாக கூறியது தற்பொழுது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.