ஸ்பைடர் மேன் திரைப்படம் வார இறுதியில் உலக அளவில் அள்ளிய வசூல் இத்தனை கோடியா.? கேட்டு அதிர்ச்சியான ரசிகர்கள்.

சினிமா உலகில் பிற மொழிப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. அதிலும் ஹாலிவுட் படங்களுக்கு என தமிழ் நாட்டு பக்கம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது  ஹாலிவுட் படங்கள் தொடர்ந்து மக்கள் மனதில் இடம் பெறுகின்றது.

மேலும் புதுவிதமாக இயக்குவதோடு மற்றும் நல்ல எச்டி தர தேதி படத்தை கொடுப்பதால் ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு பார்த்து வருகின்றனர். அந்த வகையில் ஸ்பைடர் மேன் படம் பல்வேறு பாகங்களாக அடுத்தடுத்து வெளிவந்த வண்ணமே இருக்கின்றன அண்மையில் கூட spider man no way home படம் உலக அளவில் வெளியாகியிருந்தது.

இந்த திரைப்படத்தை எம் சி யு என்ற நிறுவனம் தயாரித்திருந்தது இந்த படம் இதுவரை பல்வேறு இடங்களில் அதிக அளவில் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. ஏன் தமிழகத்தில் கூட இந்த திரைப்படம் நல்ல வசூலை அள்ளியுள்ளது  முதல் நாள் சென்னையில் மட்டுமே ஒரு கோடியை அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பைடர் மேன் திரைப்படம் இந்தியவில் 16ம் தேதியும் உலக அளவில் 17ஆம் தேதியும் இந்த திரைப்படம் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. Spider man no way home படம் வார இறுதியில் மட்டும் எவ்வளவு வசூலித்தது என்பது குறித்து தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

அதன்படி பார்வையில் உலக அளவில் இந்த திரைப்படம் அதாவது 600.9  மில்லியன்  டாலர்களை வசூலித்துள்ளது இந்திய மதிப்பின்படி சுமார் 4500 கோடி என தெரியவந்துள்ளது. ஸ்பைடர்மேன் முதல் வாரத்தில் மட்டும் இவ்வளவு கோடி என்பதே மிகப்பெரிய ஒரு இமாலய சாதனை என பேசப்பட்டு வருகிறது.

Leave a Comment