“விடாமுயற்சி” படத்தில் நடிக்க அஜித் வாங்கும் சம்பளம் இத்தனை கோடியா.? அதிர்ச்சியில் திரைப்பிரபலங்கள்

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக ஓடிக் கொண்டிருப்பவர் நடிகர் அஜித் குமார். இவர் சமீபகாலமாக சமூக அக்கறை உள்ள படங்களை கொடுத்து வருகிறார் அந்த படங்கள் ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாக வெற்றியும் அடைகின்றன.

துணிவு படத்தை தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது 62 வது திரைப்படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார் அந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்க இருந்தது ஆனால் அவர் சொன்ன கதையின் இரண்டாவது பாதி சரியில்லாததால் அவரை நீக்கி விட்டு மகிழ் திருமேனியிடம் தஞ்சமடைந்துள்ளது. அவர் இந்த படத்திற்கான கதையை தரமாக ரெடி செய்துள்ளார்.

இன்று அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு டைட்டிலை வெளியிட்டு படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது ஆம் அஜித்தின் ஏகே 62 திரைப்படத்திற்கு “விடாமுயற்சி” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மற்றபடி யார் நடிக்கிறார்கள் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளிவர வில்லை மேலும் எப்பொழுது சூட்டிங் என்பதும் தெரியப்படுத்தவில்லை.

இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் நடிக்க அஜித் எவ்வளவு சம்பளம் வாங்க உள்ளார் என்பது குறித்து ஒரு தகவலும் வெளியாகி உள்ளது. அஜித் கடைசியாக நடித்த வலிமை, துணிவு போன்ற படத்திற்காக 70 கோடி சம்பளம் வாங்கி வந்த நிலையில் தனது 62வது திரைப்படமான “விடாமுயற்சி” திரைப்படத்திற்காக அஜித் சுமார் 105 கோடி சம்பளம்..

வாங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் லிஸ்ட்டில் அஜித்தும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் மாபெரும் வெற்றி பெரும் பட்சத்தில் அஜித்தின்  சம்பளம் உயர வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை..

Leave a Comment