ஷாருக்கானின் “ஜவான் படம்” எப்படி இருக்கு.. வெளிவந்த ட்விட்டர் விமர்சனம்.!

Jwan Movie
Jwan Movie

Jawan Twitter Review : பாலிவுட் பாஷா ஷாருக்கான் பதான் படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லீ உடன் கைகோர்த்து நடித்த திரைப்படம் ஜவான் இந்த படம் ஷூட்டிங் உருவானதிலிருந்து முடியும் வரை முயற்சி இந்த படத்தை பற்றிய பேச்சுக்கள் அதிகமாக இருந்தது.

அதன் பிறகு அடுத்தடுத்து அப்டேட்டுகளை வெளியிட்டு  தெறிக்க விட்டது அந்த வகையில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தொடர்ந்து பாடல், டிரைலர் போன்றவை வெளிவந்த மிரட்டிய நிலையில் ஜவான் திரைப்படம் இன்று கோலாகலமாக உலகம் முழுவதும் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் படத்தைப் பார்த்த ரசிகர்கள் தனது twitter பக்கத்தில் ஜவான் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து பதிவிட்டு வருகின்றனர் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. ஜவான் படத்தின் முதல் பாதி சூப்பர் என்றும் இரண்டாவது பாதி முழுவதும் ஒரே GOOSEBUMPS கூறி வருகின்றனர்.

படத்தில் ஷாருக்கானின் நடிப்பு பட்டையை கிளப்புகிறது நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு பலரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்துள்ளனர். அட்லி மிரட்டிவிட்டார் ஜவான் படத்தின் ரேட்டிங் 4/5 என பலரும் கூறி வருகின்றனர்.

மற்றொருவர் படம் வேற லெவல் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்யும் ஷாருக்கானின்  ஒவ்வொரு டெலிவரியும் மாஸ்டர் பீஸ். அனிருத் இசையில் பின்னி பெடல் எடுத்து விட்டார் என கூறியுள்ளார். மற்றொருவர் ஜவான் படத்தை பார்க்க மக்கள் கூட்டம் அலை மோதுகிறது ஷாருக்கானின் என்ட்ரி அப்படி இருக்கிறது.

ஸ்க்ரீன் பிளே சூப்பர். எதிலுமே குறை இல்லை அட்லீ பட்டையை கிளப்பிவிட்டார் எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் ஒவ்வொரு பதிவுமே பாசிட்டிவாக இருப்பதால் ஜவான் சக்கபோடு போடும் என எதிர்பார்க்கப்படுகிறது வசூலில் ஒரு புதிய சாதனையை படைக்கும் என பலரும் கூறி வருகின்றனர்.