கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜகமே தந்திரம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை மிஸ் செய்த எஸ் ஜே சூர்யா அதுவும் எப்படி தெரியுமா.?

வெள்ளித்திரையில் தனுஷ் நடிப்பில் வெளியாகும் எல்லா திரைப்படங்களும் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து வருகிறது திடீரென்று தனது ரசிகர்களுக்கு நல்ல திரைப்படங்களை கொடுத்து வருகிறார்.இவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தை பற்றி தான் கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

ஜகமே தந்திரம் திரைப்படம் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாக உள்ளது இதற்கிடையில் இந்த திரைப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பல பேட்டிகளில் ஜகமே தந்திரம் படத்தைப் பற்றி பல தகவல்களை கூறி வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் இவர் ஜகமே தந்திரம் திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் முதலில் எஸ் ஜே சூர்யா தான் நடிக்க இருந்தார் என கூறி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி விட்டாராம்.ஆம் இந்த திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருந்ததாகவும் ஆனால் அவர் அப்பொழுது பல திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்ததால் அவரால் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியவில்லையாம்.

அதுமட்டுமல்லாமல் எஸ் ஜே சூர்யா நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் மலையாள நடிகர்  ஜோஜூ ஜார்ஜ் என்பவர் நடித்துள்ளாராம் மேலும் இந்த திரைப்படத்தை தனுஷ் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.

sj surya
sj surya

அதுமட்டுமல்லாமல் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் எஸ் ஜே சூர்யா மட்டும் இந்த திரைப்படத்தில் நடித்து இருந்தால் படம் இன்னும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற இருக்கும் என்று கூறிவருகிறார்கள் ஒரு சில ரசிகர்கள் ஜகமே தந்திரம் திரைப்படத்தில் தனுஷ் நடிப்பு எப்படி இருக்கும் என கேட்கிறார்கள்.

Leave a Comment