அந்த சின்ன குழந்தையோட டிரஸ் எப்படி உங்களுக்கு தப்பா தெரியுது.? ஐஸ்வர்யா ராஜேஷ் சுளீர் பதில்..

பொதுவாக சினிமாவை பொருத்தவரை ஒரு நடிகை என்றால் மிகவும் கலராகவும் அழகாகவும் இருந்தால் மட்டுமே அவரை நடிகை என ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் இப்படிப்பட்ட நிலையில் கருப்பாக இருந்தாலும் சிறந்த நடிப்பு திறமையினால் சினிமாவில் வெற்றி பெற முடியும் என நிரூபித்து காட்டிய முக்கிய நடிகைகளில் ஒருவர்தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவர் அழகாக இல்லை என்றாலும் நல்ல கதாபாத்திரங்களை தனக்கு ஏற்றார் போல் தேர்ந்தெடுத்து நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். மேலும் நடிகர்களுக்கு ஜோடியாக மட்டுமல்லாமல் பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்த வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த ஏராளமான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியினை பெற்றுள்ளது.மேலும் இவர் எப்பொழுது பேட்டி கொடுத்தாலும் தனக்கு தோன்றிய அனைத்தையும் வெளிப்படையாக கூறி விடுவார்.

அந்த வகையில் இவர் பேசும் பொழுது அது பிரச்சனையாகுமா என்பதை நினைக்காமல் பேசி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் சமீப பேட்டி ஒன்றில் ஒரு பெண் ஜீன்ஸ், லெகின்ஸ் போட்டால் தப்பா இருக்கிறது என்று சொல்கிறார்கள் அப்போ ரெண்டு வயது குழந்தை டோன் ஜீன்ஸ் போடுது..? அதுவே ஏதோ ஒரு குட்ட பாவாடை தான் போடுகிறது அப்போ அந்த குழந்தையை எப்படி தப்பா பாப்பீங்க..? என்று கேட்டுள்ளார்.

இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது இவர் டிரைவர் ஜமுனா, துருவ நட்சத்திரங்கள், சொப்பன சுந்தரி, இந்தியன் 2, இடம் பொருள் ஏவல், இது வேதாளம் சொல்லும் கதை, தி கிரேட் இந்தியன் கிச்சன், கொலைகள் நடுங்க போன்ற பத்து திரைப்படங்களிலும் நடித்து மிக பிஸியாக இருந்து வருகிறார்.

Leave a Comment