மிகவும் எளிமையான முறையில் தனது மகளின் பிறந்த நாளை கொண்டாடிய சாண்டி அதுவும் எப்படி தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்.!

சென்ற வருடம் தான் மக்கள் கொரோனா தொற்று காரணமாக பயந்து பயந்து வாழ்ந்து வந்தார்கள் ஆனால் தற்போதும் அவர்களை இந்த கொரோனா தொற்று விடாமல் துரத்திக் கொண்டே செல்கிறது அந்த வகையில் பார்த்தால் சினிமாவில் உள்ள பல பிரபலங்களும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு ரசிகர்களை விட்டு மறைந்து கொண்டே போகிறார்கள்.

தமிழக அரசு நாளுக்கு நாள் ஊரடங்கு மட்டும் போட்டுக் கொண்டே போகிறது ஆனால் மக்கள் தினசரி வேலைக்கு சென்றால் தான் எங்களுக்கு சாப்பாடு என தங்களது கஷ்டத்தை சமூக வலைதளப் பக்கங்களில் கூறி வருகிறார்கள் அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் சினிமாவில் பணியாற்றி வரும் பல நடிகர்கள்,நடிகைகள் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார்கள்.

இந்த ஊரடங்கு காலத்தில் பல சினிமா பிரபலங்கள் எப்படியாவது பட வாய்ப்பை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக தனது கவர்ச்சியான புகைப்படங்களை பல நடிகைகளும் சமூக வலைதளப் பக்கங்களில் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார்கள் ஒரு சில பிரபலங்கள் தனது மகன்,மகள் பிறந்த நாளை சிம்பிளாக கொண்டாடிய புகைப்படங்களை மட்டும் சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிடுகிறார்கள்.

மேலும் வெள்ளித்திரையில் பிரபல நடன இயக்குனராக வலம் வருபவர் சாண்டி இவர் தற்பொழுது விஜய் டிவி தொலைக்காட்சியில் BB jodigal என்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் நேற்று அவரது மகள் லாலாவிற்கு மூன்றாவது பிறந்தநாளை சாண்டி தனது வீட்டின் மாடியிலேயே சிம்பிளாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

sandi

மேலும் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தில் சாண்டி தனது மனைவி,மகள் என குடும்பத்துடன் ஜாலியாக இருக்கிறார் என்பது மட்டும் தெரிய வருகிறது.

Leave a Comment

Exit mobile version