பிரபல சன் டிவி சீரியல் நடிகையுடன் குக் வித் கோமாளி அஸ்வின்.! அதுவும் எப்படி தெரியுமா.?

பொதுவாகவே தொலைக்காட்சியில் மக்களுக்கு எந்த நிகழ்ச்சி பிடிக்கிறதோ அந்த நிகழ்ச்சிகளை தான் பார்ப்பார்கள் அந்த வகையில் சொன்னால் மக்களுக்கு தொலைக்காட்சியில் சீரியல்கள் மட்டும் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் தான் அதிகம் பிடிக்கும்.

அவ்வாறு சமீபத்தில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி சீசன்2 மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று இதில் போட்டியாளர்களாக பங்கு பெற்ற அனைத்து நபர்களும் உச்ச நட்சத்திரமாக புகழ் பெற்று விளங்கி விட்டார்கள்.

அதிலும் குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருக்கும் தற்போது பட வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே போகிறது அந்த வகையில் பார்த்தால் இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களை வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்து வந்தவர் தான் புகழ் இவர் இந்த நிகழ்ச்சியில் தனது குறும்பு தனத்தினால் மக்கள் மனதை கவர்ந்து விட்டார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் தொடர்ச்சியாக 7 திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் விளம்பர படங்களிலும் நடிக்கிறார் இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் மூன்றாவது பரிசை வென்ற நடிகர் அஸ்வினும் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டது.

ashwin9
ashwin9

அதேபோல் சன்டிவி தொலைக்காட்சியில் லட்சுமி ஸ்டோர் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்த நட்சத்திரா நாகேஷுடன் இவர் இணைந்து ஒரு குறும்படத்தில் நடித்துள்ளார்.ஆம் அஸ்வினும் இவரும் இணைந்து காதல் ஒன்று கண்டேன் பெண்ணே என்ற குறும்படத்தில் நடித்து உள்ளார்கள் மேலும் இவர் இந்த நடிகையுடன் நடித்தது தற்பொழுது அஸ்வின் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment