எப்படி இருந்த நான் இப்போ இப்படி ஆயிட்டேன்.! வாய்ப்பில்லாமல் தவிக்கும் லட்சுமி மேனனின் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகையாக ஒரு ரவுண்டு வந்தவர் தான் நடிகை லட்சுமி மேனன். கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவில் வந்து கொடி கட்டி பறந்த நடிகைகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளி படித்துக் கொண்டிருக்கும் போது சினிமா மீது உள்ள ஆர்வத்தினால் சினிமா பக்கம் வந்த நடிகை லட்சுமிமேனன் முதன் முறையாக விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான கும்கி என்ற திரைப்படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானார். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறவே இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்பு வந்து கொண்டே இருந்தது.

அதன் பிறகு சுந்தரபாண்டியன், குட்டி புலி, மஞ்சபை, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, சிப்பாய், கொம்பன், ரெக்க, புலிக்குத்தி பாண்டி, உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் நடிகை லட்சுமி மேனன்.

அதன் பிறகு சில படங்களில் கமிட் ஆகி இருந்த நடிகை லட்சுமி மேனன் ஒரு சில பிரச்சனையின் காரணமாக சினிமாவை விட்டு கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொண்டார். அந்த நேரத்தில் உடல் எடை அதிகரித்ததால் வந்த பட வாய்ப்பு போனது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நடிகை லட்சுமி மேனன் எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகாமல் இருந்து வந்தார்.

அதன் பிறகு ஏஜிபி என்ற படத்தில் நடித்தார் தற்போது வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை லட்சுமிமேனன். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் லட்சுமி மேனனின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கிறார்கள். அதாவது சந்திரமுகி 2 படப்பிடிப்பு தளத்தில் பட குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் லட்சுமி மேனன் ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியிருப்பதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்.

lakshmi menon
lakshmi menon
lakshmi menon
lakshmi menon

Leave a Comment