சிறுவயதில் தளபதி விஜய் தனது பிறந்தநாளை எப்படிக் கொண்டாடியுள்ளார் பாத்தீங்களா.! அப்பவே அப்படி இருக்காரே.

0

தமிழ் சினிமா உலகில் பல வருடங்களாக தன் திரைப்பயணத்தில் ரசிகர்களுக்கு நல்ல திரைப்படங்களை கொடுத்து வருபவர் தான் இளைய தளபதி விஜய் இவரது திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து வருகிறது அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் என்ற திரைப்படம் வசூல் மட்டும் அல்லாமல் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தனது 65வது திரைப்படத்தில் நடித்துவருகிறார் முதல்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் முடிந்த நிலையில் தற்பொழுது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

தளபதி 65 திரைப்படத்தை விட அவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்ப்பது இவர் நடிக்கும் 66வது திரைப்படத்தை எந்த இயக்குனர் எந்த தயாரிப்பாளர் இவரது திரைப்படத்தை இயக்கவும் தயாரிக்கவும் முன்வருவார்கள் என சமூக வலைதள பக்கங்களில் பலவிதமான கேள்விகளை எழுப்புகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் தளபதி விஜயின் புகைப்படங்கள் சமீப காலமாகவே சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருவதை நாம் நாள்தோறும் பார்க்கிறோம் அந்த வகையில் பார்த்தால் சமீபத்தில் கூட விஜய் புடவை கட்டியிருக்கும் சிறுவயது புகைப்படம் இணையத்தில் மிக வேகமாக வைரலானது.

vijay7
vijay7

அதைத் தொடர்ந்து தளபதி விஜய்யின் புகைப்படம் ஒன்று தற்போதும் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் இந்த புகைப்படத்தில் தளபதி விஜய் சிறுவயதில் கேக் வெட்டும் புகைப்படமாக தெரிகிறது.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சிறு வயதில் கூட விஜய் மிகவும் அழகாக இருக்கிறார் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள் ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை இணையத்தில் மிக வேகமாக ஷேர் செய்து வருகிறார்கள்.