விடுதலைப் படத்தில் இந்த காட்சியை எப்படி மிஸ் பண்ணுனீங்க.! அட இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே..

விடுதலை திரைப்படத்தின் காட்சி ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விடுதலை 1. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதுமட்டுமல்லாமல் கௌதமேனன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். தற்பொழுது விடுதலை முதல் பாகம் திரையரங்கில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த திரைப்படத்திற்கு பல பாசிட்டிவ் ரிவ்யூகள் வழங்கி வருகிறார்கள்.

இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி சில நிமிடங்களே வந்தாலும் அவரின் காட்சிகள் மிகவும் வலிமையானதாகவும் முக்கியமான காட்சிகளாகவும் அமைந்துள்ளது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள் அதேபோல் இந்த திரைப்படத்தில் விசாரணை காட்சிகள் நெஞ்சை பிளக்க வைக்கும் வகையில் பெரும் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது இந்த விசாரணை காட்சியில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் அவர்கள் போலீசில் விசாரணை என்ற பெயரில் சந்திக்கும் சித்திரவதைகள் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

மேலும் வர்க்க ஏற்ற தாழ்வு ஏற்படும் மோதல் மைனிங் நிறுவனத்தின் வருகை உணவிற்காக கஷ்டப்படும் போலீசார் என ஒவ்வொரு காட்சிகளும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்த திரைப்படத்தின் பட்ஜெட் 40 கோடி ரூபாய் ஆனால் முதலில் 4 கோடி ரூபாயில் தான் படம் எடுக்க திட்டமிட்டார்கள் பட்ஜெட் புதிய உயரத்தை எட்டியதால் இந்த திரைப்படத்தை இரண்டு பாகமாக ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளனர். பெரும்பாலும் இந்த திரைப்படம் என்பது கோடிக்கு மேல் வசூல் செய்யும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் பாகமே என்பது கோடி வசூல் செய்தால் படத்திற்கு மிகப்பெரிய லாபம் கிடைக்கும் எனவும் தெரியவந்துள்ளது இரண்டாம் பாகத்தில் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது இதன் நிலையில் விடுதலை முதல் பாகத்தின் காட்சி ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது இது திரைப்படத்தில் வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில்  விஜய் சேதுபதி நடித்திருப்பார் இவரை பலரும் தேடி வருவார்கள் ஆனால் வாத்தியாரை யாரும் பார்த்தது இல்லை என்பதால் யாருக்கும் விஜய் சேதுபதி தான் வாத்தியார் என்பது தெரியாமல் இருந்து வரும்.

அதுமட்டுமில்லாமல் தமிழ்ச்செல்வி என்ற கதாபாத்திரத்தை சூரி காதலிப்பது போல் காட்டி இருந்தார்கள். இந்த நிலையில் தமிழ்ச்செல்வி கதாபாத்திரத்தை சூரி பார்க்க செல்வார் அங்கு திரையரங்கில் ஒன்றாக சந்திப்பார்கள் தியேட்டரில் தமிழ் செல்விக்கு சூரி உணவு வாங்கிக் கொடுப்பது போல் காட்சிகள் இருக்கும் இந்த காட்சியில் வரும் சீனில் விஜய் சேதுபதி சூரிக்கு பின்னால் அமர்ந்து இருப்பது போல் காட்சி இருக்கும் இதனை துல்லியமாக பார்த்தால் மட்டுமே இந்த காட்சி தெரியவரும்.

வாத்தியாராக நடித்துள்ள விஜய் சேதுபதி முகம் யாருக்கும் தெரியாது. அதனால் அவரை யாராலும் அடையாளம் காண முடியாது இந்த நிலையில் விஜய் சேதுபதி அங்கும் இங்குமாக தைரியமாக சென்று வருவார் அப்படிதான் திரையரங்கிற்கும் வந்திருப்பார் அப்படி திரையரங்கிற்கு வந்த காட்சிகள் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Leave a Comment