இந்த பூமியில் இப்படி ஒரு நல்லவர் எப்படி இருக்க முடியும்.! சிவகார்த்திகேயனை புகழ்ந்து தள்ளும் திருமணமான நடிகை.!

0

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தில் நடித்தவர் நிரஞ்சனா இவர் தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மகள்.  நிரஞ்சனா சமீபத்தில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணத்தில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். நிரஞ்சனா கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அப்பொழுது இருவருக்கும்  காதல் ஏற்பட்டது.  அதன்பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்த திருமண தம்பதிக்கு  கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஒரு கார் ஒன்றை பரிசாக கொடுத்தார். இந்தநிலையில் சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நிரஞ்சனா மற்றும் தேசிங்கு பெரியசாமியை நேரில் சந்தித்துள்ளார்.

sivakarthikeyan
sivakarthikeyan

அப்பொழுது நிரஞ்சனா பெரியசாமி ஆகியோர் சிவகார்த்திகேயனுடன் நீண்டநேரம் உரையாடியதாக கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த பூமியில் இப்படி ஒரு நல்லவர் எப்படி இருக்க முடியும் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது எனவும் சிவகார்த்திகேயனுடன் அழகான நீண்ட உரையாடல் தனக்கு நினைவில் இருக்கிறது எனவும் நிரஞ்சனா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அவர் பதிவு செய்ததுடன் ஒரு புகைப்படத்தையும் இணைத்து வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் சிவகார்த்திகேயன் தேசிங்கு பெரியசாமி நிரஞ்சனா மற்றும் கனி ஆகியோர்கள் இருக்கிறார்கள்.

இந்த புகைப்படம் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் பெற்ற வைரலாகி வருகிறது.