மூன்று முக்கிய பிரபலங்கள் இல்லாமல் இந்த படத்தை எப்படி இயக்குவது.! வருத்தத்தில் இருக்கும் செல்வராகவன்!! இந்த 2வது பாகத்திற்கும் வந்த முட்டுக்கட்டை…

0
selvaraghavan
selvaraghavan

தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் செல்வராகவன். இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் தற்போது நடிகராகவும் களமிறங்கியுள்ளார் அந்த வகையில் பீஸ்ட் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த செல்வராகவன் அதன் பிறகு சாணி காகிதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து  செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஒரு திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க போவதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. செல்வராகவும் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான 7ஜி ரெயின்போ காலனி என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் அன்றைய காலகட்ட ரசிகர்களுக்கு ஏற்ற படமாக அமைந்தது.

இந்த நிலையில் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது அதுமட்டுமல்லாமல் இரண்டாவது பாகத்திலும் ரவி கிருஷ்ணா தான் கதாநாயகனாக நடிக்கிறார் என்றும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் 7ஜி ரெயின்போ காலனி படத்தில் நடித்த மூன்று முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் இல்லாதது செல்வராகவனுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த விஜயன் மற்றும் மனோரமா நடித்திருந்தார்கள் ஆனால் இவர்கள் இருவரும் தற்போது உயிரோடு இல்லாத காரணத்தால் அவர்களுடைய இடத்தை யார் பூர்த்தி செய்யப் போகிறார் என்ற குழப்பம் செல்வராகவனுக்கு இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து 7ஜி ரெய்ன்போ காலனி படத்தில் ரவி கிருஷ்ணாவுக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்திருப்பார். இதனை தொடர்ந்து இரண்டாவது பாகத்திலும் அவரை நடிக்க வைக்க வேண்டும் என்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது ஆனால் ஒரு சில பிரச்சினைகள் காரணமாக இந்த படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்து விட்டதாக கூறபடுகிறது.

ஏற்கனவே இரண்டு பிரபலங்களை இழந்த செல்வராகவன் தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகையை மிஸ் செய்ததால் இந்த படத்தை எப்படி இயக்கப் போகிறார் என்ற குழப்பம் இருந்து வருவதாகவும் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன எடுப்பார் என்று தெரியாமல் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.