14 வருஷம் கழித்து பார்த்தாலும் என்ன அழகா இருக்காங்கப்பா.! தளபதி 67படபிடிப்பு பூஜையில் கலந்துகொண்ட விஜய் த்ரிஷாவை புகழும் ரசிகர்கள்…

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தளபதி 67 திரைப்படத்திற்கான பூஜை தொடங்கப்பட்ட நிலையில் எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகும் இருந்தது. இந்த நிலையில் தற்போது ஒவ்வொரு அப்டேட்டுகளும் வெளியாகி கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் யார் யார் என்ற விவரத்தை படக்குழு வெளியிட்டு உள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் மற்றும் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் மற்றும் பணியாற்றும் பணியாளர்கள் என அனைவரும் சேர்ந்து பூஜை போடப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது இணையத்தில் பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து தற்போது இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இதனை தொடர்ந்து திருப்பாச்சி, கில்லி, குருவி திரைப்படத்திற்கு பிறகு இவர்களது கூட்டணி இணைய இருக்கும் நிலையில் இவர்களுடைய க்யூட்டான வீடியோ மற்றும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது.

அதுமட்டுமல்லாமல் விஜய் மற்றும் திரிஷா இருவரும் ஜாலியாக இருக்கக்கூடிய புகைப்படம் மற்றும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வைரலாகி வருவது மட்டுமல்லாமல் இவர்கள் இருவரையும் பார்த்து மெய் சிலிர்த்து போய் வருகிறார்கள் அதாவது அன்றைக்கு பார்த்த விஜய் திரிஷா போலவே இன்று வரையிலும் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருக்கிறார்கள் என்று கூறி வருகிறார்கள்.

ஏவிஎம் ஸ்டுடியோவில் தொடங்கப்பட்ட இந்த பூஜையின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது அடுத்த கட்ட படபிடிப்பிற்காக அனைவரும் காஷ்மீரில் படப்பிடிப்பை தொடங்க ஆரம்பித்து விட்டார்கள்.

இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏராளம் என்றே சொல்லலாம் ஏனென்றால் இதற்கு முன்பு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த நிலையில் தளபதி 67 திரைப்படமும் அதைவிட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள் அதுமட்டுமல்லாமல் தளபதி 67 திரைப்படமும் எல்சியு-வில் இணைய உள்ளதால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தில் விக்ரம் திரைப்படத்தில் அமைந்த காட்சிகள் போல் இந்த படத்திலும் சில காட்சிகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அதாவது விக்ரம் படத்தில் கைதி காட்சியை இடையில் வைத்திருப்பார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதேபோல தளபதி 67 திரைப்படத்திலும் விக்ரம் மற்றும் கைதி ஆகிய இரண்டு படத்தின் காட்சிகளை வைத்திருப்பார் என்று கூறப்படுகிறது.

இதனால் தளபதி 67 திரைப்படத்தில் கார்த்தி மற்றும் சூர்யா, கமல்,பகத் பாசில், ஆகியோர் கேமியோ ரோலில் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இது குறித்த அடுத்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment