கண்ணா இதெல்லாம் சும்மா “சுஜிபி” மெயின் பிக்சர் பாத்தா அலண்டு போய்டுவ..! பேட்டியில் கெத்து காட்டிய துணிவு இயக்குனர்..!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து இரண்டு திரைப்படங்களுக்கு மேலாக தல அஜித்தை வைத்த திரைப்படம் இயக்கி வரும் இயக்குனர் என்றால் அவர் வினோத் தான். அந்த வகையில் வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் அஜித்  நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

ஆனால் சமீபத்தில் இவர்கள் கூட்டணியில் துணிவு என்ற திரைப்படம் உருவாக்கிய நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்கில் வெளியாக உள்ளது மேலும் இந்த திரைப்படத்தை பார்த்து ரசிப்பதற்காக ஒட்டுமொத்த ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார்கள்.

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்த திரைப்படத்தில் இருந்து வெளியான செல்லா செல்லா பாடல் ஆனது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாடல் காசேதான் கடவுளடா பாடலை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

இதனை தொடர்ந்து தற்பொழுது நமது துணிவு திரைப்பட இயக்குனர் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் பேசி உள்ளார் இவ்வாறு அவர் பேசிய பொழுது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகம் ஏற்பட்டது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் மிகுந்து விட்டது.

அப்படி என்ன பேசினார் என்று தெரியுமா துணிவு திரைப்படத்தில் அஜித்தின் லுக்கில் உள்ள ஒரு சின்ன முன்னோட்டத்தை மட்டுமே வெளியிட்டுள்ளோம் அதற்கு ரசிகர்கள் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியிலும் உள்ளார்கள் அவர்கள் கொண்டாடுவதை நான் நன்றாகவே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

vinoth
vinoth

மேலும் இவை சின்ன முன்னோட்டம் தான் மேலும் நாங்கள் பிறகு வெளியிட போகும் ஒவ்வொரு ப்ரோமோகளையும் பார்த்தால்  ரசிகர்கள் என்ன செய்வார்கள் என்பதை நான் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை ஏனெனில் திரைப்படம் அந்த அளவிற்கு மிகவும் தரமாக உருவாகியுள்ளது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன் என வினோத் கூறி உள்ளார்.

Leave a Comment