நடிப்பிற்கு பெயர்ப்போன விக்ரம் எப்படிப்பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாக மாறி நடிப்பார் அப்படித்தான் தனது படங்களில் தொடர்ந்து சிறப்பாக நடித்து வருகிறார் இருப்பினும் அவருடைய சமீபகால படங்கள் கதை சரியில்லாத காரணத்தினால் தோல்வியை தழுவுகின்றன.
இதிலிருந்து மீண்டு வர விக்ரம் சிறந்த இயக்குனர்களுடன் அடுத்தடுத்த படம் பண்ணி வருகிறார். அந்த வகையில் மணிரத்தினத்துடன் இணைந்து பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தார். படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததை தொடர்ந்து பா. ரஞ்சித்துடன் கூட்டணி அமைத்து “தங்கலான்” திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடிப்பு வருகிறார். இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கதையாக உருவாகி வருகிறது.
கோலார் தங்க வயலில் தமிழர்கள் பட்ட துயரத்தை அப்படியே படமாக இயக்குனர் பா. ரஞ்சித் எடுத்து வருகிறார் விக்ரம் இந்த படத்திற்காக ரொம்ப மெனக்கட்டை நடித்து வருகிறார் என சொல்லப்படுகிறது இந்த திரைப்படத்தை மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் ஸ்டுடியோ ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஜி. வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
“தங்கலான்” படத்தின் ஷூட்டிங் பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது குறிப்பாக ஆந்திரா மாநிலம் கடப்பா மற்றும் கர்நாடக மாநிலம் கேஜிஎபில் நடைபெற்று வருகிறதாம் இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து பசுபதி, மாளவிகா மோகனன் என பலர் நடித்து வருகின்றனர் இந்த நிலையில் படத்தின் கதைக்கு ஏற்ப ஹாலிவுட் நடிகர் டான் கால்டஜிரோனா தட்டி தூக்கி உள்ளது.
இத்தனை “தங்கலான்” படக்குழு புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். அந்த புகைப்படத்தில் அவர் ஒரு வேட்டைக்காரர் போல் இருக்கிறார் இதை வைத்து பார்க்கும் போதே தெரிகிறது மக்களை கொடுமைப்படுத்தும் ஒரு முரட்டுக்காரன் கதாபாத்திரத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது. எது எப்படியோ இவர் இணைந்ததன் மூலம் தங்கலான் படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.