பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு திடீர் மரணம் எதனால் தெரியுமா.? இணையத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்.!

கடந்த வருடம் முதல் தற்போது வரை தமிழ் திரையுலகை சேர்ந்த பல நடிகர்கள், நடிகைகள் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் அதில் ஒரு சிலர் மறைந்து விடுகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் தமிழில் தற்போது ஆட்டோகிராப் பட புகழ் பாடகர் கோமகன் இந்த நோயால் உயிரிழந்தார் என்ற செய்தி ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வந்தார்கள் அதற்குள் இன்னொரு தமிழ் சினிமா உலகைச் சேர்ந்த பிரபல காமெடி நடிகர் இந்த நோயால் திடீரென மறைந்து விட்டார்.

யார் அந்த நடிகர் என்று கேட்டால் மக்களை தனது நடிப்புத் திறமையால் வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்து வந்த நகைச்சுவை நடிகர் பாண்டு இன்று மறைந்து விட்டார்.இவர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டதை கண்டறிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென்று உயிரிழந்துவிட்டார்.

மேலும் இவரது இழப்பை தாங்க முடியாமல் தற்போது தமிழ் சினிமா உலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் இவருக்கு இரங்கலை தெரிவித்து வருவது மட்டுமல்லாமல் ரசிகர்கள் பலரும் குழம்பி வருகிறார்கள்.

pandu2
pandu2

ஏனென்றால் இவர் பல்வேறு திரைப்படங்களில் தனது காமெடி திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் இவரது இழப்பை தாங்க முடியாமல் சமூக வலைதளப் பக்கங்களில் ரசிகர்கள் பலரும் அவரது புகைப்படம் மற்றும் வீடியோ காணொளி போன்றவற்றை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

Leave a Comment