போடுடா வெடிய.. “துணிவு” படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி இதுவா.?

எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் துணிவு. அஜித் ஹீரோவாக நடித்து வருகிறார் அவருடன் கைகோர்த்து மேலும் மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி அஜய், யோகி பாபு, மகாநதி சங்கர் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்..

இந்த படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரியை மையமாக வைத்து உருவாக்குவதால்  இந்த படத்திலும் அதிக ஆக்சன் காட்சிகள் இடம்பெறும் என தெரிய வருகிறது  அதே சமயம் இந்த படத்தில் சமூக அக்கறை உள்ள கருத்துக்கள் நிறைய இடம்பெறும் என தெரிய வருகின்றன. அஜித்தின் 61வது படத்திற்கான  எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.

துணிவு படத்தின் ஷூட்டிங் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்து அடுத்ததாக டப்பிங் நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் வரை உறுதி செய்துள்ளது படக்குழு.. இதுவரை துணிவு படத்திலிருந்து  ஒரு சில போஸ்டர்கள் மட்டுமே வெளியாகி உள்ளது.

இருப்பினும் ரசிகர்கள் அடுத்தடுத்த அப்டேட்டுகளைக் கேட்டு வருகின்றனர் அண்மையில் கூட இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் போது ரசிகர் ஒருவர் அப்டேட் கேட்டது இணையதளத்தில் வைரலானது.. கேட்க ரசிகர்கள் தற்பொழுது ஆரம்பித்திருக்கின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் துணிவு திரைப்படத்தின் டிரைலர் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என்பது குறித்து தற்பொழுது தகவல் கிடைத்திருக்கிறது..

அதன்படி பார்க்கையில் துணிவு படத்தின் டரைலர் வருகின்ற டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக ஒரு தகவல் இணையதள பக்கத்தில் பரவி வருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். ஆனால் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவர வில்லை..

Leave a Comment