அப்பா சூர்யாவை விட அழகில் ஜொலிக்கும் அவரது மகன்..! செம ஹேண்ட்ஸம் என வழியும் ரசிகைகள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சூர்யா தற்பொழுது சினிமாவையும் தாண்டி பிசினஸ் செய்வதில் மிகுந்த ஆர்வமுடன் இருந்து வருகிறார் அந்த வகையில் ஐந்துக்கும் மேற்பட்ட பிசினஸ்களை செய்து வரும் சூர்யா இதன் மூலம் பல கோடி சம்பாதித்து வருவதாகவும் சோசியல் மீடியாவில் ஏராளமான தகவல்கள் வைரலாகி வருகிறது.

எனவே இதன் காரணமாக தான் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாய் இருந்த நிலையில் சில திரைப்படங்களை வேண்டாம் என தவிர்த்து வருகிறாராம். இவ்வாறு நடிகர் சூர்யா நடிப்பில் சில திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில் அந்த படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் காத்து வருகிறார்கள். மேலும் ஆண் ரசிகர்களை போலவே நடிகர் சூர்யாவிற்கு பெண் ரசிகர்களும் அதிக அளவில் இருந்து வருகிறார்கள்.

அதேபோல் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இந்த நட்சத்திர ஜோடிகளுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வரும் நிலையில் நடிகர் சூர்யா இந்த அளவிற்கு பெண்களுக்கு மிகவும் பிடிப்பதற்கு முக்கிய காரணம் ஜோதிகா தான். ஏனென்றால் ஜோதிகா பல நிகழ்ச்சிகளில் சூர்யா தன்னை எப்படி பார்த்துக் கொள்கிறார் என்பதை கூறி வந்த நிலையில் பெண்கள் அனைவரும் சூரியா போல் தனக்கு ஒரு கணவர் வேண்டும் என விரும்புகின்றனர்.

jothika

இவ்வாறு பல ரசிகையின் மனதை நடிகர் சூர்யா கொள்ளையடித்துள்ள நிலையில் அவருக்கு டஃப் கொடுக்க தற்பொழுது அவருடைய மகனும் களமிறங்கி இருக்கிறார். ஆம், அதாவது நடிகை ஜோதிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகள், மகன், நாய்க்குட்டி என அவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் மகன் தேவ் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சூர்யாவை விட ஹேண்ட்சமாக தேவ் இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்றுள்ளது.

Leave a Comment

Exit mobile version