இவரின் வாழ்கை வரலாற்று படத்தில் நடிக்க உள்ளது .! நயன்தாராவா.?அனுஷ்காவா.?த்ரிஷாவா.?

சமீப காலமாக வரலாற்று சாதனை படைத்த பிரபலங்களின் உண்மை கதையை வைத்து தற்போது படமாக எடுத்து வருகிறது சினிமா உலகம். அந்த வகையில் தோனியின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாவித்திரி வாழ்க்கை வரலாறு போன்ற உலகப் பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து வருகின்றனர்.

அத்தகைய படங்கள் திரையரங்கில் வெளிவந்து மிகப் பெரிய சாதனை படைத்து வருகிறது அந்த வகையில் தற்போது ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பிரபல விளையாட்டு வீராங்கனையான கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாறு படத்தை பிற மொழிகளான தெலுங்கு ஹிந்திபோன்றவற்றில் தற்பொழுது படமாக எடுக்கப்பட்டு வருகிறது.

அதுபோல அவரின் கதையை சஞ்சனா ரெட்டி என்பவர் தமிழில் இயக்கவுள்ளார் இப்படத்தில் மல்லேகேஸ்வரியாக நடிக்க தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது இதை அறிந்த ரசிகர்கள் இப்படத்தில் நயன்தாரா நடித்தால் சிறப்பாக இருக்கும் என கூறிவருகின்றனர்.

Leave a Comment