காதலர் தினத்திற்கு வெளியாகிறது ஹிப்ஹாப் ஆதியின் ஆல்பம்.! வெளியான தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஹிப் ஹாப் ஆதி. இவர் ஆரம்பத்தில் யூடியூப் சேனல் மூலம் பிரபலமாகி தற்போது இவரை தெரியாத ஆட்கலே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். இசையமைப்பாளராக இருந்து தற்போது நடிகராகவும் திகழ்ந்து வருகிறார் ஹிப்ஹாப் ஆதி. இவர் நடிகராக மட்டும் இல்லாமல் பல படங்களில் பாடல்களை பாடியும் எழுதியும் வருகிறார்.

மீசையமுறுக்கு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி பிரபலமான ஹிப் ஹாப் ஆதி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறார். ஒரு சி படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து ஹிப் ஹாப் ஆதி அவர்கள் தற்போது ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார் அதாவது இவர் நடிப்பில் உருவாகி வரும் PT சார் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் தற்போது ஒரு புதிய ஆல்பம் பாடலை ரெடி செய்திருக்கிறார்.

இந்த ஆல்பம் பாடலை வருகின்ற காதலர் தினத்திற்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது “பொய் பொய் பொய்” என தொடங்கும் இந்த பாடலை எதிர்பார்த்து ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். நீண்ட நாள் கழித்து நடிகர் ஆதியின் ஆல்பம் பாடல் தற்போது வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

ஏற்கனவே இவர் பல ஆல்பம் பாடல்களை வெளியிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வெளியிட்ட அனைத்து ஆல்பம் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மேலும் ஒரு ஆல்பம் பாடலை காதலர் தினத்திற்கு வெளியிடுகிறார் இதனால் காதலர் தினம் ஒரு ஸ்பெஷல்நாளாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Leave a Comment