தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வரும் நடிகர் ஆதி தனது பள்ளி படிப்பிலேயே கவிதை எழுதுவது மற்றும் இசையில் ஈடுபாடு காட்டினார். ஓய்வு கிடைக்கும் நேரங்களில் வீட்டில் இருக்கும் தனது கணினியில் இசைக் கோர்வை மென்பொருளை நிறுவி தான் எழுதிய பாடல்களை ராப் இசையில் பாடி எழுதுவது போன்ற செயல்களை செய்து வந்தார்.
அதன் பிறகு 2005 ஆம் ஆண்டு youtube இந்தியாவில் அறிமுகமான போது அதில் தான் எழுதிய ராப் பாடல்களை ஹிப்ஹாப் தமிழா என்ற பெயரில் யூடியூபில் பதிவு செய்து பிரபலமானார். இவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது இவருடைய நண்பர் ஜீவா தான். பொறியல் பட்டப்படிப்பை முடித்த ஆதி இசையில் முழுமூச்சாக இறங்கிய போது தனது வீட்டை எதிர்த்து சென்னை புறப்பட்டு வந்தார்.
அவருடன் ஜீவாவும் தனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அவருடன் சேர்ந்து சென்னைக்கு வந்து சொந்த வீடு எடுத்து தங்கினார். ஆதியும் ஜீவாவும் இணைந்து தங்களது சொந்த ராப் பாடல்களை கல்லூரி நிகழ்ச்சிகளிலும், நிறுவன நிகழ்ச்சிகளிலும் மேடை ஏறி பாடத் தொடங்கினர்.
அதன் பிறகு 2012இல் ஹிப் ஹாப் தமிழன் ஆல்பத்தை ஜீவாவும், ஆதியும் இணைந்து தயாரிக்க தீம் மியூசிக் நிறுவனம் வெளியிட்டது. யூட்யூபில் 10 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இந்த ஆல்பத்தை பார்த்து பின் தொடர ஹிப்பாப் தமிழன் என்கிற பெயர் மிகவும் பிரபலமானது. அதன் பின்னர் இசையமைப்பாளர் அனிருத் இசையில் வணக்கம் சென்னை என்ற பாடலை பாடி சினிமாவில் அறிமுகமானார் ஆதி.
பின்னர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆம்பள திரைப்படத்தில் அனைத்து பாடல்களையும் பாடி அந்த படத்திற்கு இசையமைத்து ஒரு இசையமைப்பாளராக சினிமாவில் அறிமுகமானார். தனது சொந்த வாழ்க்கை வரலாறை ஒரு படமாக எடுத்த படம் தான் மீசைய முறுக்கு இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
அதன் பிறகு அடுத்தடுத்த திரைப்படங்களில் இசையமைக்க ஆரம்பித்த இவர் தற்போது முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் ஹிப் ஹாப் ஆதி தற்போது ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆம் 2017 ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி அன்று லட்சையா தேவரெட்டியை திருப்பதியில் ஒரு தனிப்பட்ட விழாவில் ரகசியமாக ஆதி திருமணம் செய்து கொண்டார்.