ஹிப்ஹாப் ஆதியின் ஆசையை நிறைவேற்றுவாரா அஜித்.! விவரம் கீழே!!

தமிழ்சினிமாவில் இசையமைப்பாளர்கள் நடிகர்களாக மாரி வருகிறார்கள். அதுபோல தற்பொழுது பல வெற்றிப்படங்களை கொடுத்து நடிகராகி உள்ளவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் இதற்கு முன்பு மீசைய முறுக்கு, நட்பே துணை போன்ற வெற்றி படங்களை கொடுத்த நிலையில் தற்போது இவர் நான் சிரித்தால் படத்தில் நடித்து இருக்கிறார்.

இப்படம் காதலர் தினத்தில் வெளி வர உள்ளதால் நல்ல கலெக்ஷனை பெரும் அதுமட்டுமில்லாமல் வெற்றி பெறும் என இக்குழுவினர் எதிர்பார்த்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளிவந்து மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தற்போது வெளியாகி உள்ளது.

இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஹிப்ஹாப் ஆதி அவர்கள் தமிழ் சினிமாவில் எல்லா நடிகர்களிடமும் பாராட்டு வாங்கிவிட்டேன். ஆனால் ஒருவரிடம் மட்டும் பாராட்டு வாங்கவில்லை என வருத்தப்பட்டார் அவர் வேறு யாரும் அல்ல தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தல அஜித்.

அவர்களிடமிருந்து எந்த பாராட்டும் வாங்கவில்லை. இந்த நிலையில் எனது படமனா நான் சிரித்தால் படத்திலாவது நான் நன்றாக நடித்திருந்தால் அவர் என்னை பாராட்டுவார் என எதிர்பார்க்கிறேன் என்று கூறினார். அஜித் அவர்கள் என்னை தம்பி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும் நான் சந்தோஷப்படுவேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment