கொரோனோ வைரஸ் பற்றி கிண்டலாக பதிவிட்ட ஹிப் ஹாப் ஆதி.! டேய் அறைமேண்டல் ஆப்பாயில் என கிழித்து தொங்கவிட்ட நெட்டிசன்கள்!!

கொரோனா வைரஸ் உலகையே உலுக்கிக் கொண்டு வருகிறது. சுமார் 24 நாடுகளில் தற்பொழுது கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியதாக தகவல் தெரிவிக்கிறது. இந்த வைரஸை தடுக்க உலக சுகாதார அமைப்பும் மற்றும் சீனா மருத்துவர்களும் இந்நோய்க்கான எதிர்வினையாற்றும் மருந்தை கண்டுபிடித்து வருகிறார்கள். மருத்துவர்களால் இந்த வைரஸை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாததால் அனைத்து தரப்பு மக்களும் பயந்து பீதியில் உள்ளனர்.

இந்த வைரசின் தாக்குதலால் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழிந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில் முன்று பேருக்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்கள், குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் மேலும் இரண்டு பேருக்கு நோய்த்தாக்குதல் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. இத்தாலியில் இருந்து டெல்லிக்கு திரும்பிய ஒருவரும் தெலுங்கானாவை சேர்ந்த ஒருவரும் கூட நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் ஹிப்பாப் தமிழா முகமூடி அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை ஒன்றை பதிவிட்டு மேலும் ட்விட் ஒன்றையும் போட்டுள்ளார். நான் காற்று அதிகமாக வீசும் இடத்திற்கு செல்லும் பொழுது தூசு படக்கூடாது என்பதற்காக முகமூடியை அணிந்து உள்ளேன். ஆனால் பார்ப்பவர்கள் அனைவரும் கரோனா வைரஸ் என்று தான் நினைப்பார்கள். புறவய சர்க்கரை நோய் என்றால் நம்மிடம் நிலவேம்பு இருக்கு ப்ரோ என்று கேலி செய்துள்ளார். ஹிப்பாப் ஆதியின் இந்த பதிவை பார்த்து ஒரு சிலர் கேலி செய்தனர், ஒரு சிலர் செமகடுப்பில் இருந்துள்ளனர்.

ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல என்றும் அவருக்கு அறிவுரை கூறி வருகிறார்கள் ரசிகர்கள். அதேபோல சமீபத்தில் சார்மி அவர்கள் கொரோனோ வைரஸ் பற்றி கேலியாக பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டார் இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை வறுத்து எடுத்தனர் இந்த நிலையில் இப்பொழுது ஹிப்பாப் தமிழா இதுபோல் பண்ணி உள்ளதால் அவர் மீது ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் இருந்து வருகிறார்கள்.

tweet
tweet

Leave a Comment