பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக ஹிப்ஹாப் ஆதி..! யாரை காப்பாற்றியுள்ளார் தெரியுமா..?

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக அமைந்ததுதான் பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் தற்போது ஐந்தாவது சீசன் ஆரம்பித்த மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது அந்த வகையில் இந்த ஐந்தாவது சீஸனில் 77 நாட்கள் முடிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் நான்கு வாரங்கள் மட்டுமே உள்ளது. இந்நிலையில் மிக விரைவாகவும் உச்சகட்டத்தில் சென்று கொண்டிருக்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களை மிக ஆர்வத்துடன் பார்க்க வைத்துக்கொண்டிருக்கிறது.

hip hop aadhi-1
hip hop aadhi-1

இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்ட ஆறு நபர்களில் ராஜூ காப்பாற்றப்பட்டு உள்ளதாக கமலஹாசன் அறிவித்துள்ளார். அந்தவகையில் மீதமுள்ள 5 பேர்களில் ஒருவரை கமல் காப்பாற்றுவார்  எதிர்பார்த்த நிலையில் திடீரென பிக்பாஸ் வீட்டிற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி சிறப்பு விருந்தினராக நுழைகிறார்.

அந்த வகையில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில்  5 பேர்களில் ஒருவரைக் காப்பாற்றும் வேலையை ஹிப்ஹாப் ஆதி இடம் ஒப்படைக்கிறார். இதில் ஒரு ட்விஸ்ட் என்னவென்றால் நடிகர் ஆதி பிரியங்கா காப்பாற்ற பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

priyanga-1
priyanga-1

மேலும் மீதி உள்ள நான்கு பேர்களில் யார் எலிமினேட் ஆகப் போகிறார்கள் என்பதை கமல் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். அந்த வகையில் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் அபிநய் எலிமினேட் செய்யப்பட்டார் என்பது தெரிந்த விஷயம் தான்.

Leave a Comment