இப்படியும் ஒரு அப்பாவா மகளுக்காக பசுமாட்டை விற்று மொபைல் வாங்கிதந்த தந்தை.! நெகிழவைக்கும் சம்பவம்

0

உலகமுழுவதும் கொரோனா அச்சுறுத்தி வருகிறது எனவே நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில் தற்பொழுது பள்ளி, கல்லூரிகளில் உள்ள மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் பாடங்களை சொல்லிக் கொடுக்கின்றன.

இந்த நிலையில் கங்கரா மாவட்டத்தின் ஜவாலமுகி தெஹ்ஸில் உள்ள கும்மர் கிராமத்தில் வாழ்ந்து வரும் பிரதீப் குமார் என்பவரின் மகள் நான்காம் வகுப்பு படித்து வருகிறார் ஆன்லைன் கிளாசிக்காக ஸ்மார்ட் போன் தேவைப்படுகிறது என்பதால் பசு மாட்டினை 6,000திற்கு விற்று இவருடைய பெண்ணுக்கு ஸ்மார்ட்போன் வாங்கி தந்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அந்த பசுமாடு தான்  இவருடைய குடும்பத்திற்கு வருமானமாக இருந்து வந்தது.

இந்த நிலையில் இவருக்கு வான்ஸ் என்ற இரண்டாம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பசு மாட்டின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நகர்த்தி வந்த குல்தீப், மகளின் ஆன்லைன் வகுப்புக்காக அதனை விற்ற செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், பலரும் உதவ முன்வந்துள்ளனர்.

நடிகர் சோனு சூத் இந்த செய்தியை பகிர்ந்து மாடுகளை திரும்பப் பெற உதவ முன்வந்துள்ளார், மேலும் அவருடைய விவரங்களை பற்றியும் கேட்டுள்ளார்.