வெறித்தனமாக வேட்டையாடி 2019-ல் வசூலில் முதல் ஐந்து இடத்தை பிடித்த தமிழ் திரைப்படங்கள் லிஸ்ட் இதோ.!

0

வருடத்திற்கு தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 200 திரைப்படங்களுக்கு மேல் ரிலீசாகிறது, இந்தத் திரைப்படங்களில் அனைத்தும் வெற்றி பெற்றது என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும் ஏனென்றால் மாஸ் ஹீரோக்களின் திரைப்படம் ஓரளவு ஓடிவிடும், அதேபோல் கதைக்கு முக்கியத்துவம் திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று திரையரங்கில் வெற்றி பெற்றுவிடும். இந்த வருடம் 2019 ஆம் ஆண்டு பாதி வருடம் முடிந்து விட்டன இந்த நிலையில் இதுவரை 100 திரைப்படங்களுக்கு மேல் ரிலீசாகியுள்ளது இதில் ஒரு சில படங்களே வசூலில் வெற்றி பெற்றுள்ளன அவைகள் எந்தெந்த திரைப்படம் என்று இங்கே காணலாம்.

தமிழகத்தைப் பொருத்தவரை இந்த வருடத்தில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்றால் விஸ்வாசம் தான் இந்த திரைப்படம் ரசிகர்களிடமும் பொது மக்களிடமும் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது ஆனால் இந்திய அளவில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படம் பேட்ட.

தமிழக அளவில் : 1. விஸ்வாசம், 2. பேட்ட, 3. காஞ்சனா 3, 4. NGK, 5. தடம் மற்றும் Mr. லோக்கல், இந்திய அளவில் : 1. பேட்ட, 2. விஸ்வாசம், 3. காஞ்சனா 3, 4. NGK, 5. மிஸ்டர் லோக்கல்.