அய்யய்யோ வேண்டவே வேண்டாம் உங்க ஆட்டத்துக்கு நாங்க வரலப்பா.! தெரிந்து ஓடும் தியேட்டர் உரிமையாளர்கள்…

அஜித் மற்றும் விஜயின் படங்கள் ஒரே தினத்தில் மோத உள்ளதால் திரையரங்கு உரிமையாளர்கள் கொஞ்சம் அச்சத்தில் இருக்கிறார்கள். அதாவது ரசிகர்கள் திரையரங்கில் அலப்பறைகள் செய்து ஸ்கிரீனை கிழித்து விடுவார்களோ என்று எண்ணி பயந்து ஓடுகிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்.

தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித் மற்றும் விஜய் இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்குப் பிறகு தற்போது தங்கள் திரைப்படத்தின் மூலம் மறுபடியும் மோதிக்கொள்ள இருக்கிறார்கள். வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் வெளியாகிறது இதனால் உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க பொதுவாக சினிமாவில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானால் 1மணி அல்லது 4 மணி காட்சிகள் இருக்கும் ஆனால் இந்த முறை விஜய் அஜித் படம் இரண்டுமே ஒரே தினத்தில் ரிலீஸ் ஆகிறது என்பதால் 1மணி மற்றும் 4 மணி காட்சிகளை  நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்.

ஏனென்றால் விஜய் மற்றும் அஜித்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். துணிவு மற்றும் வாரிசு படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் 1 மணி மற்றும் 4 மணி ஷோக்கள் நடந்தால் ரசிகர்களை கண்ட்ரோல் பண்ண முடியாது அதுமட்டுமல்லாமல்  தற்போது ரசிகர்கள் இந்த இரண்டு படத்திற்காகவும் உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

இதனால் ரசிகர்களை கட்டுப்படுத்துவது மட்டுமல்ல திரையரங்கு சேதமடைந்து விடும் எனவும் கூறி வருகிறார்கள் அதனால் 1 மணி மற்றும் 4 மணி ஷோல்களை நீக்கி விட்டு தற்போது 8 மணிக்கு ஷோவை ரசிகர் ஷோவாக நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சும்மாவே விஜய் அஜித் ரசிகர்கள் தற்போது சோசியல் மீடியாக்களில் போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் இந்த இரண்டு படங்களும் ஒரே நாட்களிலும் வெளியாவதால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வருவது மட்டுமல்லாமல் பலவிதமான சேதங்கள் ஏற்படும் என்பதற்காக திரையரங்கு உரிமையாளர்கள் தற்போது பீதியில் உள்ளனர்.

Leave a Comment