ஹீரோயின் கிடைக்காததால் விக்னேஷ் சிவன் எடுத்த மாஸ்டர் ப்ளான்..! AK 62 லேட்டஸ்ட் அப்டேட்

0
AK 62
AK 62

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வருவர் அஜித். இவர் நடிப்பில் உருவான துணிவு திரைப்படம் கடந்த 11 தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக வெற்றியடைந்து உள்ளது.

நிச்சயம் துணிவு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் நடிகர் அஜித்குமார் அடுத்ததாக இளம் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் கைகோர்த்து ஒரு படம் பண்ண இருக்கிறார் அந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்கப்பட இருக்கிறது.

ஏகே 62 திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் இல்லாத திரைப்படமாக உருவாக இருக்கிறதாம் இந்த படத்தில்  அரவிந்த்சாமி, சந்தானம், திரிஷா போன்றவர்கள் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன ஆனால் அது குறித்து உறுதியான தகவல்கள் வரவில்லை. இப்படி இருக்கின்ற நிலையில் சமூக வலைதள பக்கத்தில் ஒரு தகவல் மட்டும் படும் வைரலாகி கொண்டு இருக்கிறது.

AK 62 திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக முதலில் நயன்தாரா பிறகு த்ரிஷா சொல்லப்பட்டது. கடைசியாக பாலிவுட் ஹீரோயின் என கூறப்பட்டது. தற்போது வந்த தகவல்  விக்னேஷ் சிவன் படத்தின் கதைக்கு ஏற்றவாறு ஹீரோயினை தேடும் பணிகள் தான் இருந்து வருகிறாராம்..

இப்படியே இழுத்துக் கொண்டே போனால் படப்பிடிப்பை நடத்த முடியாது என கருதி அஜித் மற்றும் மற்ற நடிகர்களின் போர்ஷனை முதலில் எடுத்து விட்டு கடைசியாக ஹீரோயினை வைத்து படத்தை எடுக்க இயக்குனர் விக்னேஷ் சிவன் திட்டமிட்டு உள்ளார். இந்த தகவலை அஜித் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பெரிய அளவில் பகிர்ந்த வருகின்றனர்.