பாவம் கணேசன் சீரியலில் கதாநாயகி மாற்றம்.! இவருக்கு பதில் எந்த நடிகை நடிக்க உள்ளார் தெரியுமா.?

0

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அதோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் வித்யாசமான கதை உள்ள ரசிகர்களை கவரும் வகையில் அமைகிறது.

அந்த வகையில் சமீபத்தில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் தான் பாவம் கணேசன். இந்த சீரியல் நடுத்தரமான குடும்பத்தை சேர்ந்த ஒரு மூத்த மகன் எப்படியெல்லாம் தனது தம்பி. தங்கைகள் மற்றும் அம்மாவை  சந்தோஷமாக வைத்துக் கொள்கிறார் என்பதை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.

எனவே அந்த ஹீரோவை குறிக்கும் வகையில் தான் இந்த சீரியலின் பெயர் பாவம் கணேசன் என்று பெயர் வைத்துள்ளார்கள்.தற்பொழுது உள்ள இளைஞர்கள் பலரின் வாழ்க்கையில் நடப்பதை வைத்து இந்த சீரியல் இயக்கப்படுகிறது இதன் காரணமாக குழந்தை நட்சத்திரங்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

சமீபத்தில்தான் இந்த நாடகம் அறிமுகமாகி இருந்தாலும் சில நாட்களிலேயே டிஆர்பி-யில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் பல சின்னத்திரை இளம் நடிகர், நடிகைகள் நடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் இந்த சீரியலில் கணேசனின் காதலியாக யமுனா என்ற கேரக்டரில் நடித்து வந்த நாயகி தற்பொழுது மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக காற்றின் மொழி உள்ளிட்ட இன்னும் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷிவன்யா நடிக்க உள்ளார்.

pavam kanesan
pavam kanesan