மாஸ் டைட்டிலுடன் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் ரிலீஸ் தேதி.! இதோ போஸ்டர்

0

பிஎஸ் மித்திரன் விஷாலின் இரும்புத்திரையை  தொடர்ந்து இயக்கி வரும் திரைப்படம் ‘ஹீரோ’, இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தான்  ஹீரோவாக நடித்து வருகிறார் அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார் மேலும் அர்ஜுன், இவனா, விவேக், யோகி பாபு என பலர் நடித்து வருகிறார்கள். கே ஜே ஆர் ஸ்டுடியோ தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார்.

இந்த திரைப்படத்திற்கு எடிட்டராக ரூபன் மற்றும் ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ் கமிட்டாகியுள்ளார். இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ரிலீஸ் தேதி தகவலுடன் டைட்டில் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள் படக்குழு.

ஏற்கனவே ஹீரோ என்ற டைட்டில் விஜய் தேவார கொண்டா நடித்து வருகிறார் இப்பொழுது சிவகார்த்திகேயனும் இதே டைட்டில் உள்ள படத்தில்தான் நடிக்கிறார், அதனால் இந்த திரைப்படத்தில் பிரச்சினை வருமா இல்லை இரண்டு படக்குழுவும் பேசி சமரசம் செய்து கொண்டதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

hero
hero