நடிகை நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்துவரும் நிலையில் தற்பொழுது கனெக்ட் திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார்.
இதற்கு முன்பு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த மாயா திரைப்படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில் இரண்டாவது முறையாக இணைந்து கனெக்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் ட்ரெய்லரை சற்று முன்பு படக்குழுவினர்கள் வெளியிட்டுள்ளார்கள் இந்த படத்தில் நடிகை நயன்தாராவுக்கு ஜோடியாக நடிகர் வினய் நடித்துள்ளார்.
மேலும் சத்யராஜ், பாலிவுட் நடிகர் அனுபம் கேர் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மேலும் இந்த படத்தினை நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் தங்களுடைய சொந்த நிறுவனமான ரவுடி பிரக்சஸ் நிறுவனத்தின் மூலம் பிரம்மாண்டமாக இந்த திரைப்படத்தை தயாரித்து உள்ளார்கள் ஹாரர் மற்றும் திரில்லர் கதைய அம்சமுடன் உருவாகி உள்ள இந்த படத்தின் சற்று முன்பு வெளியாகியுள்ளது.
மேலும் மிகவும் தித்திக் நிமிடங்களுடன் இருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது மேலும் அந்த ட்ரெய்லரில் நயன்தாராவின் மகள் ஒரு அமானுஷ்ய சக்தியிடம் மாட்டிக் கொள்ள அவரை அதிலிருந்து எப்படி மீட்கிறார் அதற்காக எந்த அளவிற்கு நயன்தாரா மிகவும் பரபரப்பாக பயத்துடன் இருக்கிறார் என்ற காட்சிகளுடன் இடம்பெற்றுள்ளது மேலும் இந்த திரைப்படம் வருகின்ற டிசம்பர் மாதம் 22ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.