பிக்பாஸ் முகின் நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் இதோ.!

நடிகர் கமலஹாசன் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை சீசன் சீசனாக தொகுத்து வழங்கி வருகிறார். இதில் பங்குபெறும் பிரபலங்கள் பலரும் அடுத்த கட்ட லெவெலுக்கு முன்னேறுகின்றனர்.

அந்த அளவிற்கு இந்த போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர்கள் வெளியே வந்த பிறகு பட வாய்ப்பை அல்லது உடைய அடுத்த லெவலுக்கு செல்வது வழக்கம்.

அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் பட்டத்தைப் பெற்ற முகின் தற்போது தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஒரு படத்தில் நடித்து வருவதாக சமீப காலமாக தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது அவர் ஒரு படத்தில் நடித்துள்ளார் என்று உறுதியாகியுள்ளது.

இந்த படத்தை கவின் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார் கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது இதை மலையாள நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார்.

இந்த படத்திற்கு வேலன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது இந்தப்படம் விறுவிறுப்பாகவும் அதே சமயம் சுறுசுறுப்பாகவும் எடுக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படம் நிச்சயம் மக்களுக்கு நல்ல விருந்து அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது தற்போது இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Leave a Comment