கிராமத்து ஸ்டைலில் மிரட்டும் ஆர்யாவின் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் பட டீசர் இதோ.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த வருபவர் நடிகர் ஆர்யா இவர் தற்போது முத்தையா இயக்கத்தில் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கிராமத்து பாணியில் உருவாவதால் ரசிகர்கள் பெரிய அளவில் இதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் அது மட்டுமல்லாமல் நடிகர் ஆர்யாவின் புது முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக முத்தையா அவர்கள் கிராமத்து பாணியில் படங்களை இயக்குவதில் கை தேர்ந்தவராக திகழ்ந்து வருகிறார் அந்த வகையில் கொம்பன் மற்றும் விருமன் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது ஆர்யா மற்றும் முத்தையா கூட்டணியில் உருவாகி வரும் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகி செம்ம வைரளாகி வருகிறது.

முழுக்க முழுக்க கிராமத்து பாணியில் எடுக்கப்பட்ட காதர் பாட்சா படத்தின் டீசர் தற்போது படக்குழு இணையத்தில் வெளியிட்டிருக்கிறது. இந்த டீசரை பார்த்த பலரும் இந்த திரைப்படத்தை விமர்சித்து வருகிறார்கள். அதாவது முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படம் கிராமத்து பாணியில் எடுக்கப்பட்ட நிலையில் அதே கார்த்தி முத்தையா கூட்டணியில் வெளியான கொம்பன் திரைப்படத்தின் சாயல் போல இருப்பதாக கூறியிருந்தனர்.

இதனை தொடர்ந்து தற்போது கொம்பன் விரும்பன் அனைத்தையும் சேர்த்தது தான் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் திரைப்படம் என்று கூறி வருகிறார்கள் அந்த அளவிற்கு டீசல் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இயக்குனர் முத்தையா அவர்கள் தன்னுடைய அனைத்து படங்களையும் ஒரே சாயலில் எடுத்து வருவது அப்பட்டமாக தெரிகிறது என்றும் கூறி வருகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் இந்த கதாபாத்திரம் நடிகர் ஆர்யாவிற்கு சொல்லும் அளவிற்கு பொருந்தவில்லை என்றும் கூறப்படுகிறது. படம் வெளியான பிறகு தான் தெரியும் படம் எப்படி இருக்கு என்று என கூறப்படுகிறது.

இதோ காதர் பாட்ஷா படத்தில் டீசர்…

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment