ஆவலுடன் எதிர்பார்த்த விடுதலை படத்தின் முழு விமர்சனம் இதோ.! ரசிகர்களை கவர்ந்ததா இல்லையா.?

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, நடிப்பில் உருவான விடுதலை திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் விடுதலை படத்தின் ரசிகர்கள் விமர்சனத்தை தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூரி. அதேபோல தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய் சேதுபதி இவர்கள் இருவருமே இணைந்து தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி அவர்கள் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் வில்லனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இன்று வெளியாகி உள்ள விடுதலை படத்தின் ரசிகர்களின் விமர்சனத்தை தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

அதாவது படம் மிக அருமையாக இருக்கிறது ஒரு இடத்தில் கூட மைனஸ் கிடையாது அது மட்டுமல்லாமல் ஒரு காமெடி நடிகர் ஹீரோவாக மாறி இருப்பது புதுசாக இருக்கிறது அது சூரியின் இந்த கதாபாத்திரம் கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி அவர்கள் மிகவும் மெனக்கெட்டு நடித்திருக்கிறது தெளிவாக தெரிகிறது அந்த அளவிற்கு இந்த திரைப்படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு உள்ளார்.

மேலும் இசை மிக அருமையாக இருக்கிறது இளையராஜா அவர்களின் கைவண்ணத்தில் இந்த திரைப்படமும் ஒன்று என கூறப்படுகிறது. மேலும் விஜய் சேதுபதி பொதுவாகவே நடிப்பில் அசத்தக்கூடியவர் அதேபோல தான் விடுதலை படத்திலும் தன்னுடைய கதாபாத்திரத்தை ஏற்று அழகாக நடித்துக் கொடுத்திருக்கிறார் அது மட்டுமல்லாமல் ஒரு நண்பனுக்காக இந்த திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

பெரிய பெரிய ஹீரோவுக்கு வில்லனாக நடித்து விஜய் சேதுபதி தற்போது சூரியிக்கு வில்லனாக நடித்துள்ளது பெருமையாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் நிறைய சஸ்பென்ஸ் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் படத்தின் முதல் பாகம் கொஞ்சம் மெதுவாக சென்றாலும் இரண்டாம் பாதி மிகவும் அருமையாக இருக்கிறது என்று கூறபடுகிறது.

Leave a Comment