விடுதலை படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ.! வைரலாகும் பதிவு…

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் வெற்றிமாறன் இவர் பல வெற்றி படங்களை கொடுத்து தற்போது தனக்கான சினிமாவில் ஒரு இடத்தையும் பிடித்தால் அது மட்டுமல்லாமல் இவருடைய இயக்கத்திற்காகவே பல ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்று தான் சொல்லலாம்.

தனித்துவமான கதைகளை இயக்கி தற்போது வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் தற்போது நடிகர் சூரியை வைத்து விடுதலை படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் மூலம் நடிகர் சூரி அவர்கள் முதன் முறையாக கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனை நாட்களாக ஒரு காமெடி நடிகராக நடித்து பலரை மகிழ்வித்த சூரியவர்கள் முதன்முறையாக கதாநாயகனாக நடித்திருப்பது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது ஏனென்றால் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா அவர்கள் பல வருடமாக கதாநாயகனாக நடித்தது போல தன்னுடைய நடிப்பை வெளிக்காட்டி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

அதாவது நடிகர் சூரி அவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை திரைப்படம் இன்று திரையில் வெளியாகி இருக்கிறது அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவில் நெகடிவ் விமர்சனம் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி அவர்கள் ஒரு காவல் அதிகாரியாக அதிரடி ஆக்ஷன் காட்சியில் நடித்து பட்டய கிளப்பி உள்ளார். மேலும் இந்த திரைப்படத்திற்காக நடிகர் சூரி அவர்கள் எந்த அளவிற்கு கஷ்டப்பட்டு இருக்கிறார் என்பதை படக்குழு ஒரு வீடியோவாக வெளியிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று வெளியாகி உள்ள விடுதலை படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம். அதாவது இந்த படத்தில் தெளிவான எழுத்து திரைக்கதை வசனம் என அனைத்தும் கச்சிதமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கதாநாயகன் சூரி அவர்கள் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி இருக்கிறார். மேலும் இந்த படத்தின் உயிரோட்டம் இளையராஜா சார் தான் இயக்குனர் வெற்றிமாறன் இந்த திரைப்படத்தை கனகச்சிதமாக முடித்திருக்கிறார் கிளைமாக்ஸ் ஃபைட் சீன் வேற லெவல். என்று ஒரு ரசிகர் பதிவிட்டிருக்கிறார்.

மேலும் ஒருவர் இடைவேளை அப்டேட் மற்றும் ஓப்பனிங் சீன் மிக சூப்பராக இருக்கிறது அதுமட்டுமல்லாமல் விஜய் சேதுபதியின் பர்பார்மன்ஸ் பக்காவாக இருக்கிறது மொத்தத்தில் முதல் பாகம் ரசிகர்களின் கைதட்டலை அள்ளுகிறது என்று கூறியுள்ளார்.

இந்த ரசிகர் என்னால் இந்த படத்தை நம்ப முடியவில்லை அந்த அளவிற்கு நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கிறது அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் இரண்டாவது பாகத்திற்காக நாம் மிகவும் காத்திருக்கிறேன் பேக்ரவுண்ட் இசை ஆவரேஜ் ஆக இருந்தாலும் சாங் சூப்பராக இருந்தது என்று கூறியுள்ளார்.

Leave a Comment