சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தின் மேக்கிங் வீடியோ இதோ.! எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூரி இவர் தற்போது கதாநாயகனாக அவதாரம் எடுத்திருக்கிறார். அந்த வகையில் சூரி அவர்கள் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் விடுதலை இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்த நிலையில் இந்த படம் வருகின்ற 31ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இதனை தொடர்ந்து இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் மற்றும் இரண்டாவது பாடல் ஆகியவை வெளியாகி இருக்கிறது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் தற்போது நடிகர் சூர்யா அவர்கள் நடிக்கும் விடுதலை படத்திலிருந்து மேக்கிங் வீடியோ ஒன்றை சூரி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகிறது.

ஆரம்பத்தில் கூட்டத்தில் ஒருவராக தெரிந்து வந்த சூரி அவர்கள் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் பரோட்டா சூரியாக அவதாரம் எடுத்தார். அதன் பிறகு பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்த சூரி அவர்கள் தற்போது கதாநாயகனாக அவதாரம் எடுத்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது என்றே சொல்லலாம்.

விடுதலைப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க கமிட்டாகி இருக்கிறார் நடிகர் சூரி. இந்த படத்தின் படபிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அப்டேட்டுகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இனிமேல் நடிகர் சூர்யா அவர்கள் கதாநாயகனாக நடிக்கப் போகிறார் என்பது போல பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் தற்போது விடுதலைப் படத்திலிருந்து மேக்கிங் வீடியோ ஒன்று வெளியாகிய நிலையில் இந்த வீடியோவில் நடிகர் சூரி அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாக காட்டபட்டு உள்ளது. மேலும் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம்ம வைரல் ஆகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

Leave a Comment