படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் ஹீரோ தான்.? ஊரே மிரளும் ரவுடியை நடுரோட்டில் ஓட ஓட அடித்த ரஜினிகாந்த்.. அவருடைய அண்ணன் கூறிய தகவல் இதோ

rajini
rajini

நடிகர் ரஜினிகாந்த் ரவுடி ஒருவரை சாலையில் ஓட விட்டு அடித்த சம்பவம் குறித்து தற்பொழுது தெரியவந்துள்ளது ஓட்டுனராக தனது வாழ்க்கையை தொடங்கிய ரஜினிகாந்த் சினிமாவின் மீது ஆர்வம் வந்ததால் பிறகு வேலையை விட்டுவிட்டு சினிமா கல்லூரியில் இணைந்து படிக்க தொடர்ந்தார். இந்த நேரத்தில் பாலசந்தர் கண்ணில் பட அதனை தொடர்ந்து பிறகு அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் ரஜினியுடன் கமலஹாசன் அவர்கள் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கமலஹாசன் அவர்கள் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமானதால் இவருக்கு எளிதில் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது  ஆனால் ரஜினிகாந்த் அப்படி கிடையாது எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் அறிமுகமான நிலையில் தனது கடின உழைப்பினால் பல போராட்டங்களுக்குப் பிறகு கமலஹாசன் அவர்களை ஓரம் காட்டும் அளவிற்கு சாதித்தார்.

அப்படி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்புகள் இவருக்கு கிடைத்தது சூப்பர் ஸ்டாராக தனது கடின உழைப்பினை செலுத்தி இருந்தாலும் கருப்பாக இருப்பதனால் பல அவமானங்களை சந்தித்தார். அதன் பிறகு பல போராட்டங்கள் இருக்கு பிறகு தனது திறமையினாலும், ஸ்டைலினாலும், விடாமுயற்சியாலும் மிகப்பெரிய வெற்றினை கண்டார் அப்படி தமிழ் சினிமாவின் சாம்ராஜ்யத்தை ஆண்டார் என கூறலாம்.

இவ்வாறு தற்பொழுது வரையிலும் 169 படங்களில் நடித்திருக்கிறார் அந்த வகையில் ஜெயிலர் திரைப்படத்தில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தற்பொழுது நடித்து வருகிறார். வயதான காரணத்தினால் அனுபவங்கள் மூலம் பக்குவமாக நடந்து கொள்கிறார் ஆனால் இளம் வயதில் அப்படி கிடையாது மிகவும் கோபக்காரர். ஏன் நடிக்க வந்த பிறகும் ஏர்போர்ட்டில் பிரச்சனை செய்திருக்கிறார்.

அந்த வகையில் ரவுடிகளை ஓட ஓட அடித்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது அதாவது ரஜினிகாந்த் பேருந்து நடத்தினராக இருக்கும்பொழுது பெங்களூரில் நாராயணன் என்ற ரவுடி இருந்தாராம் அவரது பெயரை கேட்டாலே அனைவரும் பயப்படுவார்களாம் ஒருமுறை அந்த ரவுடி உடன் ரஜினிக்கு உரசல் ஏற்ப்பட்டு விட்டதாம். மற்றவர்கள் போல் பயப்படாத ரஜினிகாந்த் நாராயணனை ரோட்டில் ஓட ஓட விரட்டி அடித்தாராம் இதனால் அந்த ரவுடி அதன் பிறகு அடங்கி போய்விட்டாராம் இந்த தகவலை ரஜினியின் சகோதரர் சத்யநாராயணன் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.