“விக்ரம்” படத்தில் புதிதாக இணைந்த முன்னணி நடிகர் – வரவேற்ற கமல்.! வைரலாகும் புகைப்படம்.

சமீபகாலமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  டாப் நட்சத்திர பட்டாளங்களை வைத்து மாநகரம், மாஸ்டர், கைதி போன்ற ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.இதனையடுத்து பல்வேறு நடிகர்களும் லோகேஷிடம் கதை கேட்க ஆவலாக உள்ளனர். அந்த வகையில் லோகேஷ் கமலுக்கு கதை கூற கமலுக்கும் கதை பிடித்துப்போக தற்போது பிரம்மாண்டமாக இந்த  திரைப்படம் தயாராகி வருகிறது.

உலகநாயகன் கமலஹாசன் சினிமா உலகில் பல்வேறு திரைப்படங்களை கொடுத்துள்ளார். மேலும் தற்போது இவர் ராஜ்கமல் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதுபோக அவர் அரசியல், சின்னத்திரை பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது போன்ற அனைத்திலும் பிஸியாகவே உள்ளார்.

மேலும் இவர் கதர் ஆடை நிறுவனம் நடத்தி வருகிறார். சமீபத்தில் கூட இந்த நிகழ்விற்காக அமெரிக்கா சென்றபோதுதான் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சில நாட்கள் மருத்துவமனையில் தனிமைபடுத்தி கொண்டு இருந்தார் பின்பு அவர் குணமடைந்து பிக் பாஸ் சீசன் ஐந்தாவது நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். மேலும் தற்போது இவர் விக்ரம் படக்குழுவில்  இணைந்துள்ளார்.

தற்போது விக்ரம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் கமலுடன் விஜய்சேதுபதி, பகத் பாசில் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். மேலும் இதில் சின்னத்திரை பிரபலங்கள் பலரையும் இயக்குனர்  அறிமுகப்படுத்தியுள்ளார் . அந்த வகையில் மைனா நந்தினி, பிக்பாஸ் சிவானி, விஜே மகேஸ்வரி போன்ற சிலரும் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது விக்ரம் படத்தில் புதிதாக ஒரு பிரபலம் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது ஆம் விக்ரம் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதில் கமல், லோகேஷ் கனகராஜ் உடன் நடிகர் சந்தன பாரதி உள்ளார். மேலும் விக்ரம் திரைப்படத்தில் இவர் கமலின் நெருங்கிய நண்பராக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

vikram
vikram

Leave a Comment