திருமண நிகழ்ச்சியில் பிரபலத்துடன் தளபதி விஜய் இதுவரை பலரும் பார்த்திராத வீடியோ இதோ.!

தமிழ் சினிமாவில் தனது தந்தை இயக்கிய திரைப்படங்களில் அறிமுகமாகி பின்பு பல்வேறு இயக்குனர்களுடன் கைகோர்த்து ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தை பிடித்தவர் தான் தளபதி விஜய் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் வசூல் ரீதியாக சுமார் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

அதுமட்டுமல்லாமல் அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று நல்ல விமர்சனத்தையும் பெற்றுத்தந்தது.

இதனைத் தொடர்ந்து இளைய தளபதி விஜய் தனது 65 திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் உடன் கைகோர்த்துள்ளர் ஆம் இயக்குனர் நெல்சன் இளைய தளபதியின் 65 திரைப்படத்தை இயக்குகிறார் அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் சைக்கிளில் வந்து வாக்கு அளித்தது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

விஜய் சைக்கிளில் வந்தபோது அவரது ரசிகர்கள் அவரை சுற்றி சூழ்ந்த வீடியோ காணொளி கூட சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வந்தது.இதனை அடுத்து விஜய் வாக்களித்த கையோடு அன்று இரவே தனது 65 திரைப்படத்திற்காக ஜார்ஜியா நாட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில் விஜய் தனது மனைவியுடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார் மேலும் அப்போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ காணொளி தற்போது வெளியாகி உள்ளது அந்த வீடியோவில் பிரபல பாடகர் க்ரிஷும் உள்ளார்.

மேலும் இந்த வீடியோ காணொளி தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment