களத்தில் இறங்கி வேலை செய்த வெற்றிமாறன்.! இணையத்தை கலக்கும் விடுதலை படத்தின் மேக்கிங் வீடியோ இதோ.!

சூரி நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தான் விடுதலை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி,சூரி,பவானி ஸ்ரீ,சேத்தன்,கௌதம் மேனன் போன்ற பல நடிப்பில் உருவாகி வெளியானது. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் ஏகபோக வரவேற்பை தந்தார்கள் மேலும் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் பல கோடி வரை வசூல் செய்து விட்டது.

குறிப்பாக கூற வேண்டும் என்றால் வெற்றிமாறன் இந்த திரைப்படத்தை இயக்கியதற்காக பல சினிமா பிரபலங்களும் பாராட்டி வந்தார்கள் தற்பொழுது வரை வெற்றிமாறனிடம் விடுதலை இரண்டாம் பாகம் எப்போது என்ற கேள்வியை மட்டும் பலரும் முன் வைத்து வருகிறார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தில் இளையராஜா இசையில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் மக்களுக்கு மிகவும் பிடித்து விட்டது அதிலும் இதில் வரும் உன்னோடு நடந்தா பாடல் இணையத்தில் அதிக பார்வையாளர்களை பார்க்க வைத்து சாதனை படைத்தும் வருகிறது தனுஷ் பாடிய இந்த பாடலுக்கு ரசிகர்கள் பலரும் நல்ல வரவேற்பு தருகிறார்கள்.

இதனைத்தொடர்ந்து இந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என வெற்றி மாறனிடம் பலரும் கேட்டதற்கு வெற்றிமாறன் இன்னும் ஒரு சில காட்சிகள் இருக்கிறது அதை மட்டும் எடுத்து முடித்து விட்டால் படத்தின் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டு விடலாம் என்றும் கூறி வருகிறார்.

இந்நிலையில் விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட மேக்கிங் வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.இதில் வெற்றிமாறனின் இயக்கும் திறனை பார்த்த ரசிகர்கள் பலரும் வியந்து இந்த வீடியோ காணொளியை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள். ஒரு சில ரசிகர்கள் சூரி பாவும் அவர் மிகவும் இந்த திரைப்படத்திற்காக கஷ்டப்பட்டு இருக்கிறார் என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment