நடிகர் சிம்பு என்றால் வம்பு என கூறியது ஒரு காலம், ஏனென்றால் சிம்பு மீது பல சர்ச்சைகள் மற்றும் பல விமர்சனங்கள் எழுந்தது, அதாவது சிம்பு படப்பிடிப்பு தளத்திற்கு சரியான நேரத்திற்கு வர மாட்டார் என்றும், சரியான முறையில் ரெஸ்பான்ஸ் செய்ய மாட்டார் என்றும் பல்வேறு கருத்துக்களை பலரும் கூறினார்கள்.
அதிலும் சிம்பு திரைப்படத்தை இயக்கிய ஒரு இயக்குனர்தான் மிகப்பெரிய குற்றச்சாட்டுகளை வைத்தார், அந்தக் குற்றச்சாட்டில் இருந்து மீண்டு வரவே சிம்புவிற்கு நீண்ட காலமாகிவிட்டது, இந்த நிலையில் சிம்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் மாநாடு.
இந்த மாநாடு திரைப்படத்தில் சிம்புவுடன் இணைந்து பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகர் எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலரும் இணைந்து நடிக்கிறார்கள், வெங்கட்பிரபு படம் என்றாலே பிரேம்ஜி இல்லாமல் இருக்க மாட்டார் இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நின்றது. சிம்பு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் இந்த திரைப்படம் தான் இது. இந்த நிலையில் சிம்புவின் ரசிகர்கள் மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இடம் சமூகவலைதளத்தில் அப்டேட் கேட்டு நச்சரித்து உள்ளார்கள்.
அதனால் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதில் அளித்துள்ளார், அதில் அவர் கூறியதாவது கொரோனா ஊரடங்கு காரணமாக வெள்ளித்திரை படப்பிடிப்புகள் துவங்குவதற்கு அரசாங்கம் இன்னும் அனுமதி தரவில்லை அரசாங்கம் அனுமதி தந்தவுடன் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என அதில் கூறியுள்ளார்.