யோகி பாபுவின் நடிப்பில் உருவாகியுள்ள பொம்மை நாயகி படத்தின் டிரைலர் இதோ.!

0
bommai-nayagi
bommai-nayagi

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பது நடிகர் யோகி பாபு. இவர் தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் காமெடி கதாபாத்திரத்தில் மட்டுமல்லாமல் நடிகராகவும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் அந்த வகையில் மண்டேலா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த யோகி பாபுவின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்போது பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள பொம்மை நாயகி என்ற திரைப்படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த படத்தை ஷான் என்பவர் எழுதி இயக்கி உள்ளார். பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளாகும் தன்னுடைய மகளை போராடி எப்படி காப்பாற்றுகிறார் என்பதே இந்த படத்தின் கதை ஆகும். இந்த படத்தின் டிரைலர் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தாலும் இந்த ட்ரைலரிலையே இந்த படம் இப்படி தான் இருக்கும் என்று புரிந்து கொள்ளும் அளவிற்கு அழகாக உருவாகி இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் சமூகம் சார்ந்த ஒரு பிரச்சனையை எடுத்து கூறும் ஒரு திரைப்படமாக அமைந்துள்ளதாக தெரிகிறது. இப்படி உருவாகி இருக்கும் இந்த படத்தின் ட்ரைலர் வெளியான உடனே அதில் ரிலீஸ் தேதியையும் வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் பொம்மை நாயகி படத்தின் ரிலீஸ் பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் யோகி பாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது நாம் அனைவரும் தெரிந்த ஒன்று. இதனைத் தொடர்ந்து தற்போது பொம்மை நாயகி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படம் பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாக உள்ளதால் ரசிகர்கள் இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இதோ பொம்மை நாயகி படத்தில் டிரைலர்.