குஸ்தி வீரனாக விஷ்ணு விஷால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் கட்டா குஸ்தி படத்தின் டிரைலர் இதோ.!

0

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது கட்டா குஸ்தி என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தினை செல்ல அய்யாவு  இயக்க விஷ்ணு விஷாலும், ரவி தேஜாவும் இணைந்து தயாரித்து உள்ள நிலையில் இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக பொன்னியின் செல்வன் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய ஐஸ்வர்யா லட்சுமி தற்பொழுது கதாநாயகியாக நடித்த அசத்தியுள்ளார்.

இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள நிலையில் தமிழில் கட்டா குஸ்தி என்றும் தெலுங்கில் மட்டும் மட்டி குஸ்தி என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் வருகின்ற டிசம்பர் 2ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் தமிழக வெளியிட்ட உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு பட குழுவினர்கள் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது இந்த படத்தின் டிரைலரை பார்க்கும் பொழுது கேரளாவை சேர்ந்த ஐஸ்வர்யாவை கரம் பிடிக்க நாயகன் குஸ்தி வீரனாக களமிறங்குவதை அடிப்படையாக வைத்து தான் இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

ஆக்ஷன் காட்சிகள் நிறைந்துள்ள கட்டா குஸ்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெறம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதனை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.