ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள சிவகுமாரின் சபதம் திரைப்படத்தின் ட்ரைலர் இதோ.!

தமிழ் சினிமாவில் மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்து தற்போது நிறைய திரைப்படங்களை தொடர்ச்சியாக கைப்பற்றி நடித்துவரும் நடிகர்தான் ஹிப்ஹாப் ஆதி இவர் தமிழ் சினிமாவில் மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராகவும்,நடிகராகவும் காலடி எடுத்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து நட்பே துணை,நான் சிரித்தால் போன்ற திரைப்படங்களில் நடித்து மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் இவர் இயக்குனர்,நடிகர்,பாடகர், இசை அமைப்பாளர் போன்ற பல திறமைகளைக் கொண்டு தமிழ் சினிமாவில் வலம் வருவதால் பலரும் இவரது திரைப்படங்களை எதிர்பார்த்து வருகிறார்கள் மேலும் இவரது நடிப்பில் வெளியான நட்பே துணை திரைப்படம் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்துவிட்டது.

இதனைத்தொடர்ந்து நான் சிரித்தால் திரைப்படமும் ஓரளவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது மேலும் இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் சிவகுமாரின் சபதம் இந்த திரைப்படத்தில் ஹிப்ஹாப் ஆதி பார்ப்பதற்கு ஆள் அடையாளமே தெரியாமல் நடித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சமீபத்தில் தான் வெளியாகி வைரலாகி வந்தது மேலும் தற்போது இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் இந்த திரைப்படத்தில் ஹிப்ஹாப் ஆதி வேற லெவலில் நடித்துள்ளார்.

என்று தான் கூற வேண்டும்.அந்த அளவிற்கு இந்த திரைப்படத்தில் மிக ஆர்வம் காட்டி இவர் நடித்துள்ளார் மேலும் இந்த ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் பலரும் தற்போது இதனை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment