மாதவனின் வித்தியாசமான நடிப்பில் உருவாகியுள்ள “ராக்கெட்ரி நம்பி வளைவு” பட ட்ரைலர் இதோ.! இந்த படம் அவரது கேரியரில் பெஸ்ட் படமாகும்.

90 காலகட்டங்களில் பெண்களின் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் நடிகர் மாதவன் இவர் ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட  திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் வெகுவிரைவிலேயே பிரபலமடைந்தார்.

இருப்பினும் ஒரு கட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது இதனால் தமிழ் சினிமாவிலும் இவரால் நிலைத்து நிற்க முடியவில்லை இதனையடுத்து அவர் ஹிந்தி பக்கம் சென்று நடித்து வந்த இவருக்கு மீண்டும் தமிழ் சினிமா இறுதிச்சுற்று என்ற படத்தை கொடுத்தது.

இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவருக்கும் மீண்டும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதைத்தொடர்ந்து மாறா என்ற ரீமேக் திரைப்படத்தில் நடித்து அசத்தினார்.

அதன்பிறகு  தற்பொழுது மாதவன் வித்தியாசமான கதை களம் ஒன்றை தேர்ந்தெடுத்து நடித்து உள்ளார். அந்த வகையில் ராக்கெட்ரி என்ற  திரைப்படத்தில் நடித்துள்ளார் இத்திரைப்படத்தில் வயசான நடிகராக மாதவன் நடித்து அசத்தியுள்ளார். மேலும் அவருடன் இணைந்து சிம்ரன் நடித்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் சூர்யாவும் இணைந்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு வேற லெவல் அமைந்துள்ளது.

இந்த படம் விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்த நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது ராக்கெட்டின் நம்பி வளைவு என்ற பெயரில் மாதவன் பின்னே படம் எடுத்துள்ளார்.

டிரெய்லர் தற்போது வெளியாகி இணையதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது இதில் ஒவ்வொரு சீனிலும் மாதவனின் நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

படம் வெளிவந்து மிகப்பெரிய அளவில் ஹிட்டடிக்கும் எனக் கூறப்படுகிறதே மேலும் மாதவன் கேரியரில் இது ஒரு அவருக்கு திருப்புமுனை படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment