திரில்லர் படமாக உருவாகி இருக்கும் எஸ்.ஜே சூர்யாவின் வதந்தி திரைப்பட ட்ரெய்லர் இதோ.!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே சூர்யா நடிப்பில் ‘வதந்தி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது இந்த திரைப்படம் தற்பொழுது நேரடியாக ஓடிடி திரைப்படமாக வெளியாக இருக்கும் நிலையில் சற்று முன்பு வதந்தி திரைப்படத்தில் ட்ரெய்லர் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதில் இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் அடர்ந்த காட்டில் மரணம் அடைந்த நிலையில் அவரது மரணம் குறித்து விசாரணை செய்யும் காவல்துறை அதிகாரியாக சூர்யா நடித்திருக்கிறார் அதில் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் வகையில் திரில்லர் காட்சிகளுடன் இந்த படத்தின் கதை அமைந்துள்ளது.

இந்த படத்தில் எஸ் ஜே சூர்யாவை தொடர்ந்து சஞ்சனா, லைலா, நாசர், விவேக், பிரசன்னா, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். மேலும் இந்த படத்தினை லூயிஸ் இயக்கியுள்ளார் இதனை தொடர்ந்து விக்ரம் வேதா இயக்குனர்கள் புஷ்கர் காயத்திரி தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் வருகின்ற டிசம்பர் 2ம் தேதி அன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக ஒளிபரப்பாக இருக்கிறது.

இவ்வாறு த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு சைமன் சிங் இசையமைக்க சரவணன் ராமசாமி ஒளிப்பதிவில் ரிச்சர்ட் கவின் படத்தொகுப்பில் உருவாக்கியுள்ளது. மேலும் இந்த படத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கதிர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.