காக்கி சட்டையில் ஸ்டார் இருந்து பண்ணமுடியாத வேலையை, ஸ்டாரே இல்லாத காக்கி சட்டகாரன் பண்றான்.! குலசாமி படத்தின் ட்ரைலர் இதோ….

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விமல் இவர் தற்போது சரவண சக்தி இலக்கியத்தில் உருவாகியுள்ள குலசாமி திரைப்படத்தில் நடித்து உள்ளார். இந்த திரைப்படத்தின் வசனத்தை நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் தான் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 21 ஆம் தேதி திரையில் வெளியாக இருக்கிறது இதே தேதியில் விமலின் இன்னொரு படமான தெய்வம் மச்சான் திரைப்படம் வெளியாக இருக்கிறது. ஒரே தேதியில் வெவ்வேறு நடிகர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஒரே நாளில் தன்னுடைய இரண்டு படத்தையும் வெளியிடுகிறார் நடிகர் விமல்.

இந்த நிலையில் தற்போது விமல் நடித்திருக்கும் குலசாமி படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது இந்த படத்தின் கதை என்னவென்று அழகாக புரியும்படி உருவமைக்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் குலசாமி படத்தில் விமல் அவர்கள் தன்னுடைய சகோதரியிடம் ஒரு சிறந்த அண்ணனாக பழகி வருகிறார். அதே மறுபக்கம் பல பெண்கள் வில்லன்களால் கடத்தப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்கள். அதன் பிறகு விமல் எப்படி அந்த வில்லன்களை கண்டுபிடிக்கிறார் பெண்களை எப்படி காப்பாற்ற போகிறார் என்பதே இந்த படத்தின் கதையாக இருக்கும் என கூறப்படுகிறது.

நீண்ட ஆண்டுகளாக இந்த திரைப்படம் கிடப்பில் போடப்பட்ட நிலையில் தற்போது இந்த திரைப்படம் வெளியாக தயாராகி இருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தில் விமலுடன் இணைந்து மகாநதி சங்கர், வினோதினி, போஸ் வெங்கட், உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

அதிரடி ஆக்ஷனில் உருவான இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாகுவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வைரல் ஆகி வருகிறது.

இதோ குலசாமி படத்தின் டிரைலர்.

Leave a Comment