தப்பு பண்ற அவ்வளவு தான் பெரிசு,சிறிசு எல்லாம் கிடையாது.! மீண்டும் கேங்க்ஸ்டாராக மிரட்டும் தனுஷ் ஜகமே தந்திரம் டிரைலர் இதோ.!

கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமா உலகில் நல்ல கதை அம்சங்களை கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து தனது திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்க வேண்டும் என்பதற்காக இயக்குனர்களை பார்த்து பார்த்து தேர்வு செய்து நடித்து வருபவர் தான் தனுஷ்.

இவர் கடந்த சில வருடங்களாக தமிழ் திரையுலகில் நிறைய பிளாக்பஸ்டர் திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார் அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் வசூலில் மிரட்டி விட்டது.அதை விட இவரது நடிப்பில் இறுதியாக வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று தனுஷ் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கிவிட்டார் மாரி செல்வராஜ் கூட்டணியில் அமைந்த இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பல கோடி வசூல் செய்துவிட்டது.

அதுமட்டுமல்லாமல் தனுஷ் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் கூடிய சீக்கிரம் வெளியாக உள்ள திரைப்படம் தான் ஜகமே தந்திரம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என பல சினிமா பிரபலங்களும் கூறி வருகிறார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லக்ஷிமி நடித்துள்ளார் இதனைத்தொடர்ந்து இந்த திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் இந்த திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தத் திரைப்படம் வருகின்ற ஜூன் 18-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் இந்த திரைப்படத்தில் தனுஷின் நடிப்பு வேற லெவலில் இருக்கும் என்பது மட்டும் தெரிய வருகிறது அதுமட்டுமல்லாமல் தனுஷ் இந்த திரைப்படத்தில் தனது முழுமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

Leave a Comment