குக் வித் கோமாளி அஸ்வின் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தின் தலைப்பு இதோ.!

விஜய் டிவி தொலைக்காட்சியின் மூலம் பிரபலமானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் விஜய் டிவி தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் போட்டியாளர்களாக பங்கு பெற்ற பலரும் தற்போது சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் விஜய் டிவியில் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி சீசன்2 இந்த நிகழ்ச்சி மக்களிடையே பேராதரவைப் பெற்று விட்டது என்று தான் கூற வேண்டும்.

இதில் பங்கு பெற்ற பல சினிமா பிரபலங்களும் தற்போது சினிமாவில் நிறைய திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார்கள் அதிலும் குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் மூன்றாவது இடத்தை பிடித்த அஸ்வினுக்கு நிறைய திரைப்பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே போகிறது.

இவர் மட்டுமல்லாமல் இதில் கலந்து கொண்ட புகழ் கிட்டதட்ட ஏழு திரைப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் அதனைத் தொடர்ந்து அஸ்வின் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என சமீபத்தில் தான் ஒரு தகவல் கிடைத்தது.

அதேபோல் அஸ்வின் நடிக்கும் புதிதான ஒரு திரைப்படத்திற்கு தலைப்பு வெளிவந்துள்ளது ஆம் நடிகர் ஆர்யா தான் இந்த தலைப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது இவர் கதாநாயகனாக நடிக்கப்போகும் திரைப்படத்தின் தலைப்பு என்ன சொல்ல போகிறாய் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

enna
enna

தலைப்பை பார்த்த ரசிகர்கள் பலரும் தல அஜித்தின் ஃபேமஸ் பாடலின் வரியை இவர்கள் தலைப்பாக வைத்து உள்ளார்கள் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள் ஒரு சில ரசிகர்கள் அஸ்வின் இன்னும் நிறைய திரைப்படங்களில் நடிக்க வேண்டும் முன்னணி நடிகர்களை போல் இவரும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment